பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?

நடிகர் சந்தானம் நாயகனாக நடித்த சர்வர் சுந்தரம் படம் வரும் பொங்கல் விடுமுறைக்கு வெளியாகின்றது...
பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?
Updated on
1 min read

நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து உருவான “சர்வர் சுந்தரம்” திரைப்படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாவதாகக் கூறப்படுகிறது.

நகைச்சுவை நடிகர் சந்தானம் நாயகனாக நடித்து இயக்குநர் ஆனந்த் பால்கி இயக்கத்தில், கடந்த 2017 ஆம் ஆண்டு உருவான திரைப்படம் “சர்வர் சுந்தரம்”.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவான இப்படத்தின் வெளியீடு சுமார் 9 ஆண்டுகளாகப் பல்வேறு காரணங்களினால் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ”சர்வர் சுந்தரம்” திரைப்படம் பொங்கல் விடுமுறைகளை முன்னிட்டு வரும் ஜன.14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து, படக்குழு வெளியிட்டுள்ள விடியோவில் “பொறுத்தது போதும் பொங்கி எழு” எனும் நகைச்சுவை வசனம் பொங்கல் பண்டிகையைக் குறிப்பதாக அமைந்துள்ளது.

முன்னதாக, நடிகர் விஜய்யின் “ஜன நாயகன்” திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதிலிருந்து ஏராளாமான திரைப்படங்கள் வெளியிட்டிற்குத் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

பொங்கலுக்கு வெளியாகும் சர்வர் சுந்தரம்?
ஜன நாயகன் விவகாரத்தில் முழு அரசியல்: காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்

It has been reported that the film "Server Sundaram," starring actor Santhanam, is scheduled for release during the Pongal holidays.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com