பிரிட்டனில் அன்கட் வெர்ஷனாக வெளியாகிய பராசக்தி!

பிரிட்டனில் அன்கட் வெர்ஷனாக வெளியாகிய பராசக்தி படம் குறித்து...
Parasakthi film poster.
பராசக்தி பட போஸ்டர். படம்: எக்ஸ் / அஹிம்சா என்டர்டெயின்மென்ட்
Updated on
1 min read

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படம் பிரிட்டனில் அன்கட் வெர்ஷனாக வெளியாகி இருக்கிறது.

இந்தியாவில் வெளியான பராசக்தி படத்தில் மொத்தமாக 25 இடங்களில் தணிக்கை வாரியம் காட்சிகளையும் வசனங்களையும் நீக்குமாறும் மாற்றுமாறும் உத்தரவு பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.

பராசக்தி படத்தில், 52 இடங்களில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான வசனங்கள் மியூட் செய்யப்பட்டு, தணிக்கைச் சான்றிதழ் மூலம் வழங்கப்பட்டது.

தணிக்கை வாரியத்தின் அறிவுரைக்குப் பிறகு, 162.43 நிமிஷங்களுடன் பராசக்தி படம் இன்று இந்தியாவில் வெளியானது.

மிகவும் புகழ்பெற்ற வசனமான 'தீ பரவட்டும்' என்பதற்குப் பதில் நீதி பரவட்டும் என மாற்றப்பட்டுள்ளது. 'ஹிந்தி அரக்கி' என்ற வார்த்தை மட்டும் வசனத்துக்கு ஏற்ப அரக்கி என்று மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டில் படத்தை வெளியிடும் அஹிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பராசக்தி திரைப்படம் பிரிட்டனில் அன்கட் வெர்ஷனாக எந்தக் காட்சிகளும் வசனங்களும் நீக்காமல் வெளியாகுமென நேற்று (ஜன.9) தெரிவித்திருந்தது.

மத்திய தணிக்கை வாரியத்தின் செயல்பாடுகளால் சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள்.

இந்தக் காரணத்தினால் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன.9-ல் வெளியாகாமல் தள்ளிப்போயிருக்கிறது.

Summary

Actor Sivakarthikeyan's film 'Parasakthi' has been released in the UK as an uncut version.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com