

நடிகர் சிவகார்த்திகேயனின் பராசக்தி ஜனவரி 10 ஆம் தேதியில் வெளியிடப்படும் என்று படக்குழு உறுதி செய்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள பராசக்தி படத்துக்கு, இன்னும் தணிக்கைச் சான்றிதழை மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கவில்லை. இதனால், பராசக்தி வெளியீடு தள்ளிப் போக வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், படக்குழு அறிவித்தவாறு, அதே ஜனவரி 10 ஆம் தேதியில் திரையரங்குகளில் பராசக்தி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான டான் பிச்சர்ஸ் அறிவித்துள்ளது.
நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கும் தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாத நிலையில், நாளை (ஜன. 9) வெளியாகவிருந்த ஜன நாயகனின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில்தான், சிவகார்த்திகேயனின் பராசக்தியும் தள்ளிப்போகும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.