

இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவியும் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார்.
ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பகத் ஃபாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார்.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது. தற்போது, நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷஃபினா பபின் பாக்கர் (Shifina Babin Pakker) இயக்குநராக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.