ரூ.150 கோடி வசூலித்த சர்வம் மாயா..! ஓடிடியில் வெளியீடு!

நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா படம் குறித்து...
Riya Shibu and Nivin Pauly in the film Sarvam Maya.
சர்வம் மாயா படத்தில் ரியா ஷிபு, நிவின் பாலி. படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.
Updated on
1 min read

நடிகர் நிவின் பாலியின் சர்வம் மாயா திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்து அசத்தியுள்ளது.

இந்தப் படம் இன்று முதல் (ஜன.30) ஹாட்ஸ்டார் ஓடிடியில் திரையிடப்படுகிறது.

மலையாள இயக்குநர் அகில் சத்யன் இயக்கத்தில் உருவான இந்தப் படம் கடந்த டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.

ஜஸ்டின் பிரபாகரன் இசையில் உருவான இந்தப் படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்தது.

சமீப காலமாக வெற்றிப் படங்கள் இல்லாமலிருந்த நிவின் பாலிக்கு கம்பேக் திரைப்படமாக சர்வம் மாயா அமைந்திருந்தது.

முக்கிய கதாபாத்திரத்தில் அஜு வர்கீஸ், ரியா ஷிபு நடித்துள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி ஆகிய 7 மொழிகளில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

Riya Shibu and Nivin Pauly in the film Sarvam Maya.
தமிழக அரசின் விருது வென்ற துஷாரா விஜயன் கூறியதென்ன?
Summary

Actor Nivin Pauly's film 'Sarvam Maya' has impressed by collecting Rs. 150 crore worldwide so far.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com