சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தந்தையுடன் இணையும் ரீனா! ஹார்ட் பீட் - 3 கதை இதுதானா?

ஹார்ட் பீட் - 3 இணையத் தொடரின் கதைப் பற்றி...

News image

ஹார்ட் பீட் - 3 - JioHotstar

Updated On :2 ஜூலை 2026, 1:17 pm IST

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் வருகின்ற ஜூலை 30 முதல் ஒளிபரப்பாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கத்தில் டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரித்து வரும் ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் இரண்டு பாகங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிறுவயது காதலர்களான விஜய்க்கும் (கார்த்திக் குமார்) ரதிக்கும் (அனுமோள்) பிறக்கும் குழந்தை நாயகி ரீனா (தீபா பாலு). ரதியின் தந்தை, குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விடுவதுடன், விஜய்யிடம் குழந்தை இறந்துவிட்டதாக சொல்கிறார். ரதிக்கு தேவ் என்பவருடன் திருமணமாகிறது.

பின்னர், மருத்துவர்களான ரதி, விஜய், ரீனா ஆகியோர் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் சூழல் ஏற்படுகிறது. ரீனாவுக்கும் ரதிக்கும் இடையேயான உறவு இருவருக்கும் தெரியும். ஆனால், விஜய்தான் தந்தை என்பதை ரீனாவிடமிருந்து ரதி மறைத்துவிடுகிறார்.

விஜய்தான் தனது தந்தை என அறியும் ரீனா விபத்தில் சிக்குகிறார். உயிருக்கு போராடிய ரீனாவை, விஜய்யும் ரதியும் இணைந்து காப்பாற்றுகிறார்கள். உயிர்பிழைத்த ரீனா, தனது தந்தையை பார்க்கும்போது, அவரை காவல்துறையினர் கைது செய்கிறார்கள். ரீனா கோமா நிலைக்குச் செல்கிறார். இந்த காட்சிகளுடன் ஹார்ட் பீட் - 2 தொடர் நிறைவடைந்தது.

ரீனா கோமாவிலிருந்து மீள்வாரா?, விஜய்யுடன் செல்வாரா? அல்லது ரதியுடன் இருப்பாரா? போன்ற பல்வேறு கேள்விகளுடன் 8 மாதங்களாக 3வது சீசனுக்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.

கதை இதுதானா?

இந்த நிலையில், ஹார்ட் பீட் -3 தொடருக்கான அறிவிப்பு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அதில், ஒருபுறம் விஜய், ரீனாவும், மறுபுறம் ரதி, அர்ஜூனும் இருப்பது போன்று காட்சி இடம்பெற்றுள்ளது. இதிலிருந்து, கோமாவிலிருந்து மீளும் ரீனா, அவரது தந்தை விஜய்யுடன் செல்கிறார் என்பது தெரியவருகிறது.

Story image

அர்ஜூன் கைகளில் புத்தகத்துடன் இருக்கிறார். ஆர்.கே. மருத்துவமனையின் சிஇஓ பதவியிலிருந்து விலகிய அர்ஜூன், பாதியில் விட்ட மருத்துவப் படிப்பை தொடரவுள்ளார்.

இதனிடையே, ரீனா (தீபா பாலு) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட போஸ்டரில் முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார்.

“சில இடங்களில்... சில மனிதர்களை... விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மிக்க நன்றி” என்று இரு நாள்களுக்கு முன்பு குறிப்பிட்டிருந்தார்.

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட் பீட் தொடரிலிருந்து தீபா பாலு விலகுகிறாரா? என்று அதிர்ச்சி அடைந்தனர். தொடரின் புரோமோஷனுக்காக பதிவிட்டுள்ளரா? என்றும் குழப்பம் அடைந்தனர்.

இதையடுத்து, நேற்று வெளியிட்டிருக்கும் மற்றொரு பதிவில், “புது இடம்.. புது மனுஷங்க.. புது வாழ்கை.. ஆர்.கே. ஹாஸ்பிடல் என் இதயத்துக்கு ரொம்ப க்ளோஸ், ஆனா ஒரு இடம் தான். ஏஎம் ஹாஸ்பிடல்ல புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதிலிருந்து, மூன்றாவது சீசனில் ஆர்.கே. மருத்துவமனையிலிருந்து விலகும் ரீனா, தனது தந்தையுடன் ஏ.எம். மருத்துவமனையில் பணிபுரியப் போகிறார் எனத் தெரிகிறது.

ஹார்ட் பீட் ரசிகர்கள் மூன்றாம் பாகத்தின் ஒளிபரப்புக்காக ஆவலுடன் காத்துள்ளனர்.

Summary

Reena reunites with her father! Is this the story of Heartbeat 3?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.