திமுகவின் தோல்விக்கு போதைப்பொருள் புழக்கம்தான் காரணம்! ஆதவ் அர்ஜுனாபிகார்: கோயிலில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி காஞ்சிபுரம்: கோயில் திருவிழா தகராறில் 2 இளைஞர்கள் வெட்டிப் படுகொலை கோவை அமுதன் கொலையில் போலீசார் மீது நடவடிக்கை தேவை! உதயநிதி ஸ்டாலின்4 நிமிட ஜும் காலில் 900 பேரை பணியிலிருந்து நீக்கிய விஷால் கார்க்! இன்று அவருக்கும் அதே நிலை தொல். திருமாவளவனுக்கு மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த் பிறந்த நாள் வாழ்த்து மேற்கு வங்கம்: ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் பலி!
/

ஹார்ட் பீட் தொடரிலிருந்து விலகலா? தீபா பாலு விளக்கம்!

ஹார்ட் பீட் - 3 தொடர் குறித்து தீபா பாலு விளக்கம்...

News image

ஹார்ட் பீட் தொடர் - படம்: எக்ஸ்

Updated On :13 ஜூலை 2026, 12:06 pm IST

ஹார்ட் பீட் இணையத் தொடரிலிருந்து விலகுவதை போன்ற பதிவை தீபா பாலு வெளியிட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பையடுத்து, இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது. இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பைப் பெற்றது.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் இரண்டாம் பாகத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் தீபா பாலு கோமா நிலைக்கு செல்கிறார். அவருக்கு கார்த்திக் குமார்தான் தனது தந்தை என்ற விவரம் தெரியவருகிறது. இதோடு தொடர் முடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்றாம் பாகத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துள்ளனர்.

தீபா பாலு கோமாவிலிருந்து மீள்வாரா? அவரது தந்தை விஜய்யுடன் இணைவாரா? ஆர்.கே. மருத்துவமனை என்னவாகும்? போன்ற பல்வேறு கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் நிலவும் சூழலில், இரண்டு நாள்களுக்கு முன்னதாக தீபா பாலு இன்ஸ்டாகிராமில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், “சில இடங்களில்... சில மனிதர்களை... விட்டுப்போவது எளிதல்ல. ஆனால் சில ’பிரிவு’ நமது நல்லதுக்காகத்தான். எப்போதும் நன்றியுடன் இருப்பேன். மிக்க நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பதிவை பார்த்த ரசிகர்கள் ஹார்ட் பீட் தொடரிலிருந்து தீபா பாலு விலகுகிறாரா? என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர். தொடரின் புரோமோஷனுக்காக பதிவிட்டுள்ளரா? என்றும் குழப்பம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், ஹார்ட் பீட் - 3 வெளியீட்டுத் தேதி நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. அந்த போஸ்டரில் ரீனாவும் இடம்பெற்றுள்ளார்.

இதையடுத்து, அவர் மீண்டும் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில், “புது இடம்.. புது மனுஷங்க.. புது வாழ்கை.. ஆர்.கே. ஹாஸ்பிடல் என் இதயத்துக்கு ரொம்ப க்ளோஸ், ஆனா ஒரு இடம் தான். ஏஎம் ஹாஸ்பிடல்ல புதிய அத்தியாயத்தைத் தொடங்க வேண்டிய நேரம் இது.” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதன்மூலம், முந்தை பாகங்களில் அவர் பணிபுரிந்து வந்த ஆர்.கே. மருத்துவமனையிலிருந்து விலகு, தற்போது புதிதாக ஏ.எம். மருத்துவமனையில் சேர்வது போன்று மூன்றாம் பாகத்தின் கதை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Summary

Quitting the 'Heart Beat' series - Deepa Balu clarifies!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.