முதல்வர் விஜய்யுடன் ப. சிதம்பரம் சந்திப்பு! சென்னை தலைமைச் செயலகம் வெளியே புகைமூட்டம்! மக்களுக்கு மூச்சுத் திணறல்! புலி விவகாரம்! முதல்வர் விஜய்க்கு எதிரான மனுவைத் திரும்பப் பெற்ற மனுதாரர்! நிதின் நபினுடன் அண்ணாமலை சந்திப்பு! ஆட்சி நடத்துவதற்கான ‘கோர்ஸ்’ முடியும்வரை மக்கள் மடிய வேண்டுமா? இபிஎஸ் கேள்விசிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்! ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! மு.க. ஸ்டாலின் வாழ்த்து!இடைத்தேர்தலில் போட்டியில்லை! திருமாவளவன்நீங்கள் ஒரு பைத்தியம்; சிறையில் இருந்திருப்பீர்கள்! நெதன்யாகுவை எச்சரித்த டிரம்ப்!
/

ரத்ன குமாரின் 29 படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரத்ன குமாரின் 29 படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக...

News image

29 படத்தின் காட்சி - படம்: எக்ஸ்

Updated On :2 ஜூன் 2026, 1:43 pm IST

இயக்குநர் ரத்ன குமாரின் 29 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரத்ன குமார் இயக்கத்தில் காதல் திரைப்படமாக உருவான 29 திரைப்படம், மே 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

கதாநாயகனாக விது நடிக்க, நாயகியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்துள்ளார். இந்தப் படத்தில் இடம்பெற்ற சான் ரோல்டனின் பாடல்கள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.

மேயாத மான் படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ரத்ன குமார், ஜிகர்தண்டா - 2, ரெட்ரோ திரைப்படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான விதுவை நாயகனாக வைத்து இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

மேலும் இந்தப் படத்தில் மாஸ்டர் மகேந்திரன், அவினாஷ், ஷெனாஸ் பாத்திமா மற்றும் பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Story image

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் கிரியேஷன்ஸ் மற்றும் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் இணைந்து 29 படத்தை தயாரித்துள்ளன.

இந்த நிலையில், ரத்ன குமாரின் 29 திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூன் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

The OTT release date for Director Rathna Kumar's film 29 has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.