வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

கருப்பு திரைப்பட ஓடிடி வெளியீடு எப்போது?

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அமேசான் பிரைம் தளம் பதிவிட்டுள்ளது.

News image

சூர்யா

Updated On :7 ஜூன் 2026, 8:40 pm IST

கருப்பு திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு தொடர்பாக அமேசான் பிரைம் தளம் பதிவிட்டுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் த்ரிஷா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படம் கடந்த மே 15 அன்று திரையரங்குகளில் வெளியானது.  சாய் அபயங்கர் இசையமைத்திருக்கும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. சூர்யாவின் படங்களில் இந்தப் படமே அதிக வசூல் செய்துள்ளது.

படம் வெளியாகி 3 வாரங்களைக் கடந்தும் திரையரங்குகளில் திரையரங்குகளில் பார்வையாளர்கள் கூட்டம் குறையாமல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், படத்தின் ஓடிடி வெளீயிடு தொடர்பாக படத்தை வாங்கியுள்ள அமேசான் பிரைம் தளம் பதிவு வெளியிட்டுள்ளது.

இதன்படி, கருப்பு திரைப்படம் ஜூன் 19 அன்று பிரைம் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரையரங்குகளில் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருப்பதால் படத்தின் ஓடிடி வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Summary

Amazon Prime has posted an update regarding the OTT release of the movie Karuppu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.