நடிகர் ராம் சரணின் பெத்தி திரைப்படத்தின் வசூல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ராம் சரண் நடிப்பில் உருவான பெத்தி திரைப்படம் விளையாட்டின் மூலம் அங்கீகாரம் பெறும் நாயகனின் கதையாக உருவாகியிருந்தது. கடந்த வியாழக்கிழமை வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் கணிசமான ரசிகர்களால் பார்கப்பட்டும் வருகிறது.
முதல்நாள் வசூலாக ரூ. 135 கோடி வசூலித்தது. அதேநேரம், இயக்குநர் புச்சி பாபு சனா படத்தின் நாயகியான ஜான்வி கபூரை மிகக் கவர்ச்சியாக காட்டியதால் சர்ச்சைகளையும் எதிர்கொண்டார். தொடர்ந்து, பெண்களை அவமதிக்க அப்படியான காட்சிகளை வைக்கவில்லை என மன்னிப்பும் கோரினார்.

இந்த நிலையில், பெத்தி திரைப்படம் இதுவரை ரூ. 292 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதிக்குள் ரூ. 400 கோடி வரை வசூலிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
The box office collection of actor Ram Charan's film 'Game Changer' has been announced.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.











