காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

தயவுசெய்து படத்தில் வைக்காதீர்கள்... கருப்பு பாடலால் புலம்பும் ரசிகர்கள்!

கருப்பு திரைப்படத்தின் 2-வது பாடல் வெளியாகியுள்ளது...

சிலம்பரசன் , சாய் அபயங்கர்

Published On :

கருப்பு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் கடும் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவான கருப்பு திரைப்படத்தை இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கியுள்ளார். கடந்தாண்டே வெளியாக வேண்டிய திரைப்படம் ஓடிடி விற்பனை தேக்கத்தால் முறையான வெளியீட்டுத் தேதியைச் சந்திக்காமல் தள்ளிச்சென்றபடியே இருந்தது.

இதனால், சூர்யா ரசிகர்கள் தயாரிப்பு நிறுவனத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன் விரைவில் வெளியிடக்கோரி பேசி வந்தனர்.

பல காத்திருப்புக்குப் பின் அண்மையில், இப்படம் வருகிற மே 15 ஆம் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.

இந்த நிலையில், சாய் அபயங்கர் இசையில் நடிகர் சிலம்பரசன் பாடிய கருப்பு திரைப்படத்தின், ‘நாங்க நாலு பேரு’ இரண்டாவது பாடல் நேற்று (மார்ச் 23) வெளியானது.

அசல் கோலார் மற்றும் அருண் ஸ்ரீனிவாசன் எழுதிய இப்பாடலின் வரிகளும் சாய் அபயங்கரின் பின்னணி இசையும் மோசமாக இருப்பதாக இப்பாடலைச் சூர்யா ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். முக்கியமாக, தயவுசெய்து படத்தில் இதை வைக்க வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.