சின்ன திரையில் ஒளிபரப்பாகிவரும் வீரா தொடரில் கண்மணி பாத்திரம் முடிவுக்கு வந்துள்ளது. இத்தொடரில் நடிகை சுபிக்ஷா நடித்துவந்தார்.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளிக் கிழமை வரை இரவு இரவு 6.30 மணிக்கு வீரா தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரில் நடிகை வைஷ்ணவி அருள்மொழி நாயகியாகவும், அருண் நாயகனாகவும் நடித்து வருகின்றனர்.
இவர்கள் மட்டுமின்றி சுபிக்ஷா, லட்சுமி, நவீன், சங்கவி, செளந்தர்யா உள்ளிட்ட பல துணை பாத்திரங்களின் நடிப்பும் மிகுந்த பலமாக அமைந்துள்ளது.

சுபிக்ஷா - இன்ஸ்டாகிராம்
உறவுச் சிக்கல்களை மையப்படுத்தி குடும்பத்தில் உள்ள உறவுகளை மேன்மையாக்கும் வகையில் வீரா தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இத்தொடரில் கண்மணி பாத்திரத்தில் நடிகை சுபிக்ஷா நடித்து வந்தார். இவரின் நடிப்புக்கு இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளம் தலைமுறையினர் பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

சுபிக்ஷா - இன்ஸ்டாகிராம்
தற்போது கர்ப்பிணியாக உள்ள கண்மணி, குழந்தை பிறப்புக்குப் பிறகு இறந்துவிடுவதைப்போன்று கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், இனி கண்மணி பாத்திரம் இடம்பெறாது எனத் தெரிகிறது. இதனால், இப்பாத்திரத்தில் நடித்துவந்த நடிகை சுபிக்ஷாவின் ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Summary
Actress Subiksha played the role Kanmani in Veera Serial has come to an end
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சாம்பியன் பட்டத்துக்கு நெருக்கமாக பார்சிலோனா

முதல்வரை மாற்றும் விவகாரம்: கட்சி முடிவுக்கு கட்டுப்படுவோம்- டி.கே.சுரேஷ்
இளைஞரிடம் பணம் பறித்த இருவா் கைது

யாருக்கு வாக்களித்தனர்? சூசகமாக தெரிவித்த சின்ன திரை ஜோடி!
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை


