விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட வெளியீடு பற்றி அப்படத்தின் தயாரிப்பாளர் பேசியுள்ளார்.
விஜய் நடிப்பில் உருவான ஜன நாயகன் திரைப்படம் சென்சார் பிரச்னை காரணமாக பொங்கல் வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டது.
மறுதணிக்கை மற்றும் தேர்தல் காரணங்கள் என தொடர்ந்து பல சிக்கல்கள் காரணமாக படம் வெள்யாகவில்லை.
இதனிடையே, சென்ற மாதம் ஜன நாயகன் படம் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்ற நிலையில் படத்தொகுப்பாளரிடம் பணியாற்றியவர் மூலம் படம் கசிந்தது தெரியவந்தது.
இதன் பின்னர், படம் மீண்டும் மறுதணிக்கை செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால், பட வெளியீடு பற்றி தயாரிப்பு நிறுவனம் எதுவும் கூறவில்லை.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளில் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று திமுக கூட்டணி கட்சிகளின் ஆதரவைப் பெற்று இன்று ஆட்சியமைத்தது.
தமிழக முதல்வராக விஜய் இன்று பதவியேற்றார். அவருடன் சில அமைச்சர்களும் பதவியேற்றனர்.
விஜய் பதவியேற்பு விழாவிற்கு ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன் வந்திருந்த நிலையில் அவரிடம் பட வெளியீடு பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். அனைவரும் ஜன நாயகனை வெறும் படம் என்று நினைக்கின்றனர். ஆனால், அவர்தான் இப்போது தமிழ்நாட்டின் ஜன நாயகன். நாங்கள் தணிக்கைச் சான்றிதழ் பெறுவதற்காகக் காத்திருக்கிறோம். சான்றிதழ் கிடைத்தவுடன் படத்தை வெளியிடுவோம்” என்று தெரிவித்தார்.
Summary
When will Jana Nayagan be released? The Producer Shares an Update!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி காலமானார்

விஜய்க்கு ஜனநாயகன் தயாரிப்பு நிறுவனம் வாழ்த்து!
ஜன நாயகன் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு?
விடியோக்கள்

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

