லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்... முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்து!

இயக்குநர் ஷங்கர் வாழ்த்து குறித்து...

director shankar, cmo vijay

இயக்குநர் ஷங்கர், முதல்வர் விஜய்

Published On :

தமிழக முதல்வர் விஜய்க்கு இயக்குநர் ஷங்கர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் ஷங்கர் தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தவெக தலைவர் விஜய்யை வைத்து நண்பன் திரைப்படத்தை இயக்கினார். அதன்பின், பெரிய பட்ஜெட் படமொன்றில் இருவரும் இணைவதாகக் கூறப்பட்டது. ஆனால், அப்படம் உருவாகவில்லை. ஷங்கர் இயக்கிய முதல்வன் திரைப்படத்தில் முதலில் அணுகப்பட்ட நடிகர் விஜய்தான். இருப்பினும், சில காரணங்களால் அவர் ஒப்பந்தமாகவில்லை.

தற்போது, திரைத்துறையிலிருந்து தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு பல இயக்குநர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இயக்குநர் ஷங்கர் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”இதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம் என்று கூறியதையெல்லாம் தகர்த்தெறிந்து, லட்சியமும் செயலும் ஒன்று சேர்ந்தால் எதுவும் சாத்தியம் என்று நிரூபித்துள்ளீர்கள். மாண்புமிகு முதலமைச்சர் விஜய்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள். மக்களின் விருப்பம் உண்மையாகியிருக்கிறது. மேலும், உயர முன்னேறிச் செல்லுங்கள் சகோதரரே” என வாழ்த்தியுள்ளார்.

Director Shankar has conveyed his wishes to Tamil Nadu Chief Minister Vijay.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.