நடிகர் சூர்யா கருப்பு வெளியீட்டிற்காக ரூ. 100 கோடி கடனை அடைக்க முன்வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று வெளியாக இருந்த நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படத்தின் காலை காட்சிகள் தமிழகம் உள்பட பல பகுதிகளிலும் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபுவுக்கும் விநியோகிஸ்தர்களுக்கும் இடையேயான கடந்த கால நிதிப்பிரச்னையே இதற்கு காரணமாம்.
கருப்பு திரைப்படத்திற்காக விநியோகிஸ்தர்களிடம் கடனாகப் பெறப்பட்ட தொகை, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய முந்தைய நிலுவைத் தொகை, கைதி - 2 படத்திற்காக பெறப்பட்ட உரிமங்களுக்கான முன்தொகை என கிட்டதட்ட ரூ. 95 கோடி வரை தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு பிரபல திரைப்பட விநியோகிஸ்தர்களான திருப்பூர் சுப்ரமணியன், மதுரை அன்புச்செழியன், ஜஸ்வந்த் பண்டாரி உள்ளிட்டோருக்கு கொடுக்க வேண்டியுள்ளதாம்.
நீண்ட காலமாக இதுகுறித்து இருதரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நிகழ்ந்துள்ளன. ஆனால், எஸ். ஆர். பிரபு கடனைச் செலுத்தாமல் தாமதித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கருப்பை வெளியிடாமல் காட்சிகளை ரத்து செய்துள்ளதால் நடிகர் சூர்யாவே இப்பிரச்னைக்குத் தீர்வு காண மொத்த தொகையையும் செலுத்த முன் வந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வளவு பெரிய தொகையைச் செலுத்துவதற்கு அவகாசம் எடுப்பதாலேயே மாலை வரை காட்சிகள் ரத்தாகியுள்ளதாகத் தெரிகிறது.
Actor Suriya is reportedly ready to clear a debt of ₹100 crore for the release of Karuppu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மும்பை, புணேவில் வெளியான கருப்பு!
கருப்பு வெளியாகுமா? ஆகாதா? தயாரிப்பாளரைத் தாக்கும் ரசிகர்கள்!

கருப்பு படத்தின் புதிய போஸ்டர்!
நம்பிக்கை இருந்தால் அதிசயம் நடக்கும்: சூர்யா
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

