17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கருப்பு இன்றைய காட்சிகள் ரத்து?

கருப்பு வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது...

News image

கருப்பு திரைப்பட போஸ்டரில் சூர்யா - X

Updated On :14 மே 2026, 4:32 pm IST

நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் இன்று வெளியாவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் தயாரிப்பாளர் மற்றும் விநியோகிஸ்தர்களுக்கு இடையேயான நிதிப் பிரச்னையால் இன்று வெளியீட்டைச் சந்திக்காமல் இருக்கிறது. நடிகர் சூர்யாவும் இப்பிரச்னையைத் தீர்க்க பெரிய தொகையைச் செலுத்த முன் வந்துள்ளதால் விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், மாலை 4.30 மணி நிலவரப்படி அதற்கான எந்த வாய்ப்புகளும் இருப்பதாகத் தெரியவில்லை. மேலும், பல திரையரங்கங்கள் மாலை 6 மணிக்காட்சிக்கான டிக்கெட்களை ரத்து செய்ய ஆரம்பித்துவிட்டதால், கருப்பு இன்று வெளியாகாது என்றே தெரிகிறது.

பிரச்னைகள் தீர்க்கப்பட்டால் நாளை (மே. 15) இப்படம் வெளியாகலாம். நாளைக்கான டிக்கெட் முன்பதிவுகளும் துவங்கியுள்ளதால் ரசிகர்களும் நம்பிக்கையாகக் காத்திருக்கின்றனர்.

It is reported that the release of actor Suriya's film Karuppu today is doubtful.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.