ஜூனியர் என்டிஆர் - பிரசாந்த் நீல் கூட்டணியில் உருவாகும் படத்தின் கிளிம்ஸ் இன்று வெளியாகிறது.
கே.ஜி.எஃப்., சலார் போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக சலார் 2-ம் பாகத்தை இயக்குவார் என்று எதிர்பார்த்த நிலையில் அவர் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர். உடன் இணைந்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.
பிரசாந்த் நீலின் முந்தைய படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் இந்தப் படத்தின் மீது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்.டி.ஆர். ஆர்ட்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.
முன்னதாக ஜூன் 25, 2026 அன்று இப்படம் வெளியாக இருந்தது. ஆனால், ஓராண்டு கழித்து ஜூன் 11, 2027 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் கிளிம்ஸ் தமிழ் உள்பட பான் இந்திய மொழிகளில் இன்று இரவு 11.52 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
A glimpse of the film being made in the Junior NTR–Prashanth Neel collaboration is being released today.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








