கவின் ஆணவ கொலை வழக்கு: தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!முதல்வரின் அலுவல்பூர்வ இல்லமாக ‘பாமணி இல்லம்’! விஜய் ஆய்வு!அமெரிக்க இடைக்கால தேர்தல்! இறுதி முடிவுகள் வெளியாவதில் இழுபறி!விசா பிரிவுகளை 9-ஆக குறைக்க மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு பிரதமா் தேச துரோகி என்பதை 5 நிமிஷ விவாதத்தில் நிரூபிப்பேன்: ராகுல் காந்தி சவால் பிழைப்புக்காக வெளிமாநிலம் சென்ற தொழிலாளா்: மேற்கு வங்கம் திரும்ப முதல்வா் அழைப்பு புதிய வாக்காளா் படிவம், உறுதிமொழி படிவத்தை பிரித்து தோ்தல் ஆணையம் நடவடிக்கை ராஜஸ்தானில் தண்டவாளம் குண்டு வைத்து தகா்ப்பு: என்ஐஏ விசாரணை சா்க்கரை விலை மீண்டும் உயா்வு

ரஜினியுடன் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதா? சுந்தர். சி பதில்!

ரஜினி திரைப்படம் குறித்த கேள்விக்கு சுந்தர். சி பதில்...

இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினிகாந்த்

Updated On :

இயக்குநர் சுந்தர். சி நடிகர் ரஜினிகாந்த் திரைப்படம் குறித்து பதிலளித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த்தின் 173-வது திரைப்படத்தை முதலில் இயக்குநர் சுந்தர். சி இயக்குவதாக அறிவிப்பு வெளியானது. இதனைத் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் விடியோவை வெளியிட்டு அறிவித்ததும் எதிர்பார்ப்பு இயல்பாகவே அதிகரித்தது.

ஆனால், சில வாரங்களிலேயே அப்படத்திலிருந்து விலகுவதாக சுந்தர். சி அறிக்கை வெளியிட்டு அறிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது.

இதுகுறித்து சுந்தர். சியிடம் கேட்கப்பட்ட போது, “எனக்கும் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தும் எந்த வருத்தங்களும் இல்லை. என்னால் என்னுடைய கதைக்களங்களில் மட்டுமே படம் உருவாக்க முடியும். கடந்த 16 ஆண்டுகளாக என் படங்களைப் பார்த்தால் தெரியும். என் படங்களின் கதை மிகச் சாதாரணமாக இருக்கும். அந்த இடத்தில் வேலை செய்யவே பிடித்திருக்கிறது.

ரஜினி சாருடன் இணைந்தால் இயல்பாகவே பெரிய எதிர்பார்ப்பு உருவாகிவிடும். அந்த எதிர்பார்ப்பை என்னால் பூர்த்தி செய்ய முடியுமா என்கிற தயக்கம் இருந்தது. நான் சுலபமாக சமரசம் செய்துவிடுவேன். அதனால், என்னுடைய படமாக அது இருக்குமா என்றும் குழப்பம் ஏற்பட்டது. அதனால், முறையாக நடிகர் ரஜினிகாந்திடமும் தயாரிப்பு நிறுவனத்திடமும் கூறி வெளியேறிவிட்டேன்.” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், மூக்குத்தி அம்மன் - 2 புரமோஷனுக்காக நேர்காணலில் பேசிய சுந்தர். சியிடம், “மீண்டும் நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தால் இயக்குவீர்களா?” எனக் கேட்கப்பட்டது.

இதற்கு சுந்தர். சி, “இதுகுறித்து நிறைய பேசிவிட்டேன். இருந்தாலும் சொல்கிறேன். இப்போது நேரம் சரியாக அமையாததால் அப்படத்தை இயக்கவில்லை. மீண்டும் அதற்கான சூழல் அமைந்தால் இயக்குவேன்” எனத் தெரிவித்துள்ளார்.

Director Sundar C. has responded regarding a potential film with actor Rajinikanth.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.