எச்பிவி தடுப்பூசி முயற்சியில் இந்தியா புதிய மைல்கல்! புழல் சிறையில் அன்பில் மகேஸை சந்தித்த கனிமொழி எம்.பி.! கள்ளக்குறிச்சி ஆட்சியர் விவகாரம்- விளக்கம் அளிக்கும்படி அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு டெல்டா விவசாயிகளின் குறைகளைக் கேட்க திமுக சார்பில் குழு! மு.க. ஸ்டாலின் அறிவிப்புபுத்தக கொள்முதல் முறைகேட்டில் மேலும் 2 பதிப்பகங்ளுக்கு தொடர்பு: லஞ்ச ஒழிப்புத்துறை தகவல்ஜார்க்கண்டில் கிராம மக்கள் கல்வீச்சு: 12 காவலர்கள் காயம் இந்தியாவுடனான முதல் டெஸ்ட்: போராடி டிரா செய்த நியூசிலாந்து

இதனால் இரண்டு திரைப்பட வாய்ப்புகளை இழந்தேன்: முகேன்

நடிகர் முகேனின் அறிக்கை குறித்து....

நடிகர் முகேன் ராவ்

Updated On :

நடிகர் முகேன் ராவ் தன் தரப்பு குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிக்பாஸ் மூலம் கவனம் பெற்ற நடிகர் முகேன் ராவ் வேலன் திரைப்படத்தால் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து, சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதற்கிடையே, அண்மையில் பண மோசடி வழக்கில் முகேன் ராவ் பெயரும் அடிபட்டது.

இந்த நிலையில், முகேன் ராவ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”ஒரு தயாரிப்பாளர் தொடர்பாக சமீபத்தில் எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து நீங்கள் காட்டிய அக்கறை, அனுப்பிய குறுஞ்செய்திகள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுகுறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஒரு திரைப்படத் திட்டத்திற்காக முன்பணமாக ஒரு தொகையைப் பெற்றிருந்தேன். அந்தப் படத்திற்கான ஒப்பந்தத்தை மதித்து ஏறக்குறைய ஓராண்டு வரை காத்திருந்தேன். இதன் காரணமாக, வேறு இரண்டு திரைப்படங்களின் வாய்ப்புகளையும் இழந்தேன்.

Story image

இறுதியில், அந்தத் திரைப்படத்திலிருந்து விலகுவதாக தயாரிப்பாளர் முடிவு செய்தார். இருந்தாலும் நானே முன்வந்து பெற்றுக்கொண்ட முன்பணத் தொகையை முழுமையாகத் திருப்பி அளித்தேன். இந்த விவகாரத்தில் எனது தரப்பிலான கடமைகளையும் பொறுப்புகளையும் நான் முழுமையாக நிறைவேற்றியுள்ளேன். இதுவரை அமைதி காத்து, தொழில்முறை அணுகுமுறையுடன் இந்த விவகாரத்தைக் கையாண்டு வந்தேன். இனி உரிய சட்ட நடைமுறைகளின் மூலம் இதனை எதிர்கொள்ள முடிவு செய்துள்ளேன்.

பொதுவெளியில் விவாதங்களில் ஈடுபடவோ, இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விவரங்களை வெளியிடவோ நான் விரும்பவில்லை. எனது நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டு, தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Mugen Rao has released a statement presenting his side of the matter.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.