கொளத்தூர் தவெக எம்எல்ஏ வி.எஸ். பாபு காலமானார்!இந்தியாவில் ஹிந்துக்கள் விகிதம் குறையும்; முஸ்லிம்கள் அதிகரிப்பார்கள்! ஆய்வில் தகவல்!வி.எஸ். பாபு உடல்நிலை குறித்து விரைவில் அறிவிப்பு? மருத்துவமனை விரைந்தார் ஆதவ் அர்ஜுனா! போலீஸ் குவிப்புடாடா காட்டிய அக்வான்! ஏமாற்றத்திலிருக்கும் தமிழக மக்களுக்கு ஒரு நல்ல மழைச் செய்தி!கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் எப்படி இருக்கும்? கேப் டவுன் நகரமே சாட்சி!தை பிறந்தால் பல்கலைக்கழகங்களுக்கு வழி பிறக்கும்: அமைச்சர் விஸ்வநாதன்திருவண்ணாமலை தீபம்! சென்னை, விழுப்புரம், வேலூரில் இருந்து 16 மெமு ரயில்கள் - முழு விவரம்!தவெகவினர் அணையைக்கூட திறக்கிறார்கள், முதல்வர் விஜய் வாயை யாராலும் திறக்க முடியவில்லை! மு.க. ஸ்டாலின் கருத்துதிடீரென தங்கம் விலை குறைவது ஏன்? இது எத்தனை நாள்கள் வரை தொடரும்?திருப்பரங்குன்றம் விவகாரம்! தமிழக அரசின் நிலைப்பாட்டில் முரண்பாடு ஏன்? அண்ணாமலை கேள்வி!வெற்றி மகளிர் திட்டத்தில் பயன்பெற ஆதார் எண் கட்டாயம்!

என் மகள் மது அருந்துகிறவரா? எச்சரித்த அர்ஜுன்!

தன் மகள் குறித்து தவறாகப் பேசியவர்களுக்கு அர்ஜுன் எச்சரிக்கை விடுத்துள்ளார்...

நடிகர் அர்ஜுன் தன் மகள் ஐஸ்வர்யா உடன்.

Updated On :

நடிகர் அர்ஜுன் தன் மகள் குறித்து பரவும் அவதூறுகளுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா கடந்த 2024 ஆன் ஆண்டு நடிகர் தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி ராமைய்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இது, இருவீட்டாரின் சம்மதத்துடன் நடைபெற்ற காதல் திருமணம். அண்மையில், அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனாவின் திருமணம் நடைபெற்றது. இதில், ஐஸ்வர்யா கலந்துகொண்டாலும் உமாபதி ராமைய்யா புகைப்படம் இடம்பெறவில்லை. இதனால், சிலர் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகக் கூறியதுடன் ஐஸ்வர்யா குறித்து தேவையற்ற விஷயங்களையும் பகிர்ந்தனர்.

முக்கியமாக, ஐஸ்வர்யா அர்ஜுன் அதிகம் மது அருந்தியதால்தான் கணவன் - மனைவி உறவுகளுக்குள் பிரச்னை வந்தன என ஆதாரமில்லாத அவதூறுகளையும் பரப்பினர்.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் இன்று வெளியிட்ட அறிக்கையில் அதனைக் குறிப்பிடும் விதமாக, ”நடிகர்களாகிய நாங்கள் பொதுவாழ்க்கையில் இருக்கும்போது, ஊகங்களும் விமர்சனங்களும் தவிர்க்க முடியாதவை என்பதைப் புரிந்துகொண்டுள்ளோம். ஆனால், ஊகங்களுக்கும் அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைத் திட்டமிட்டு பரப்புவதற்கும் இடையே தெளிவான வேறுபாடு உள்ளது. பொதுவெளியில் இருப்பது என்பது யார் வேண்டுமானாலும் கதைகளைப் புனைந்து பரப்புவதற்கோ, ஒருவரின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதற்கோ உரிமம் அளிப்பதல்ல. எந்தவித ஆதாரமும் இன்றி ஒரு பெண்ணை மது அருந்தும் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று முத்திரை குத்துவது உள்ளிட்ட ஆதாரமற்ற மற்றும் இழிவான கருத்துகளைத் தெரிவிப்பது மிகவும் பொறுப்பற்றதும், ஏற்றுக்கொள்ள முடியாததுமாகும்.

அமைதி காப்பதே பல நேரங்களில் கண்ணியமான அணுகுமுறை என்று நாங்கள் எப்போதும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால், எங்களது மௌனத்தை இதுபோன்ற செயல்களை ஏற்றுக்கொள்வதாகக் கருதக்கூடாது. அதேபோல், தவறான தகவல்கள் தொடர்ந்து பரப்பப்படுவதற்கும் பெரிதாக்கப்படுவதற்கும் எங்களது அமைதி இடமளிக்காது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையான புகார் அளித்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளோம்.” குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER