ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

நடிகை அர்ச்சனா எனக்கு அதிர்ஷ்ட தேவதை! நடிகர் அர்ஜுன் தாஸ் பேச்சு

தொகுப்பாளர் அர்ச்சனா குறித்து நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியது தொடர்பாக...

Arjun Das’s remarks

அர்ச்சனா / அர்ஜுன் தாஸ் - DNS

Updated On :

தொகுப்பாளர் அர்ச்சனா தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டதால், அவர் தனது அதிர்ஷ்ட தேவதை என நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்துள்ளார்.

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ஜான் டோ (John Doe). இப்படம் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது,

''இந்தப் படத்தின் கதையை முதலில் இயக்குநர் மதுமிதா என்னிடம் சொன்னபோது, கதையைப் படித்துப் பாருங்கள் என்றுதான் கூறினார். கதையைப் படித்துவிட்டு நடிக்கச் சம்மதம் தெரிவித்தேன். அதன்பிறகு இப்படத்தை ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று சொன்னபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அர்கா நிறுவனத்துடன் பணியாற்றுவது எனக்குப் பெருமையான விஷயம்.

அர்ச்சனா மேடம் இந்தப் படத்தில் என்னுடைய அம்மாவாக நடித்திருக்கிறார். அவருடன் எனக்கு ஒரு சிறப்பான நினைவு இருக்கிறது. ‘கைதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்த முதல் விருது ஜீ விருது தான். அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியது அர்ச்சனா மேடம்.

அதன்பிறகு அவர் தொகுத்து வழங்கும் விருது விழாக்களில் எனக்கு விருது கிடைப்பது வழக்கமாகிவிட்டது. அதனால் அவரை என்னுடைய அதிர்ஷ்ட தேவதை என்று அழைப்பேன்.

இந்தப் படத்திலும் மிகவும் அழகாக நடித்திருக்கிறார். இயக்குநர் மதுமிதாவுடன் இது எனக்கு இரண்டாவது படம். ஆரம்பத்தில் அவரை மேடம் என்று அழைத்தாலும், எங்களுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மதுமிதா என்று நட்புடன் அழைக்கிறேன்.

இதற்கு முன்பு ஒரு படத்திற்காக என்னை ஆடிஷனுக்கு அழைத்திருந்தார். அப்போது ஆடிஷன் செய்து அனுப்பினேன். அவர் அதைத் தேர்வு செய்ததாகத் தகவல் வந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது ‘ஜான் டோ’ படத்திற்காக மீண்டும் என்னைத் தொடர்புகொண்டு இந்தக் கதாபாத்திரத்திற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்கள் என்று கூறினார். அவருடன் இணைந்து பணியாற்றியது சிறப்பான அனுபவம்.

மதுமிதா மிகவும் அர்ப்பணிப்புடன், முழுமையாகத் திரைப்படத்தைப்  பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் இயக்குநர். ஒரு பெண் இயக்குநராக மட்டுமல்லாமல், ஒரு ஒட்டுமொத்த படையையே வழிநடத்தும் ஒருவராகப் பணியாற்றியிருக்கிறார். அவருக்குத் துணையாகத் திறமையான தொழில்நுட்பக் கலைஞர்களையும் தேர்வு செய்திருக்கிறார்.

இந்தப் படத்திற்கு இசையமைத்த முஜீப் மஜீத் மற்றும் பாடகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. குறிப்பாக, என்னுடைய சகோதரி மாளவிகாவும் இந்தப் படத்தில் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

குடும்பத்தினருக்காகப் பாடல் பாடுவதற்கு அவருடைய குரலைப் பரிசோதித்துப் பார்க்கும்படி மதுமிதாவிடம் கேட்டேன். அவர் ஆடிஷனில் தேர்வானது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. படத்தை வழங்கும் ஏஜிஎஸ் நிறுவனம், அர்ச்சனா மேடம், ஐஸ்வர்யா மேடம் மற்றும் அவர்களுடைய குழுவினருக்கும் நன்றி.

நெட்ஃபிளிக்ஸ், ஜீ தமிழ், டிவோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘ஜான் டோ’ ஒரு சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் மட்டுமல்ல; இதில் வலுவான உணர்வுபூர்வமான அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. பார்வையாளர்களை இருக்கையின் நுனியில் அமர்ந்து பார்க்க வைக்கும் திரில்லராகவும் இருக்கும்.

நவம்பர் 13ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தை அனைவரும் பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும். படம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்'' என்றார்.

Summary

Actress Archana is my lucky charm Actor Arjun Das’s remarks

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER