ஜிபே செயலியில் வந்திருக்கும் பயோமெட்ரிக் பயன்பாடு! வேண்டாம் எனில் மாற்றுவதற்கான வழி?கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: 5வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!தவெகவுக்கான ஆதரவை திரும்பப் பெறப் போவதில்லை: திருமாவளவன் உறுதி!நான் அரசியல் பேச வரவில்லை; மாணவர்களுக்கு அரசியல் தேவையில்லை! முதல்வர் விஜய்குட்கா முறைகேடு வழக்கில் சாட்சி விசாரணை எப்போது? சிபிஐக்கு சிறப்பு நீதிமன்றம் கேள்விசென்னையில் உச்ச நீதிமன்றக்கிளையை அமைத்திட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் கடிதம்!எம்எல்ஏக்களை வாங்கத் தெரிந்த முதல்வருக்கு வெங்காயம் வாங்கத் தெரியாதா? உதயநிதி கேள்விடிரம்ப்புக்கு அதிர்ச்சி! அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபையை கைப்பற்றியது ஜனநாயகக் கட்சி!!அமெரிக்க தேர்தலில் இந்திய வம்சாவளி விவேக் ராமசுவாமி தோல்வி!நான் போட்டியிட்டிருந்தால் இமாலய வெற்றி பெற்றிருப்போம்! டிரம்ப்டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு அதிர்ச்சி: செனட் சபையைக் கைப்பற்றியது ஜனநாயக கட்சி!

காவல் துறை அதிகாரியாக நடித்தது பெருமை! நடிகை சஞ்சனா நடராஜன்

நேரத்தை வீணாக்காமலும், திறமையாகவும் பணியாற்றிய குழு ஜான் டோ படக்குழுதான் என நடிகை சஞ்சனா பேசியது குறித்து...

 Actress Sanjana Natarajan

நடிகை சஞ்சனா நடராஜன் - DNS

Updated On :

நடிகர் அர்ஜுன் தாஸுடன் காவல் துறை அதிகாரியாக நடித்தது பெருமை அளிப்பதாக நடிகை சஞ்சனா நடராஜன் தெரிவித்துள்ளார்.

அர்கா மீடியாவொர்க்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், மதுமிதாவின் இயக்கத்தில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவாகியுள்ள சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லர் திரைப்படம் ஜான் டோ (John Doe). இப்படம் நவம்பர் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இதனை முன்னிட்டு நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்துகொண்டு படம் குறித்த பல்வேறு பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் நடிகை சஞ்சனா நடராஜன் பேசியதாவது:

நடிகையாக மட்டுமின்றி ஒரு மனிதராகவும் இவ்வளவு அற்புதமான குழுவுடன் இணைந்து பணியாற்றியதில் மகிழ்ச்சி. அர்ஜுன் தாஸுடன் நான் இணைந்து நடிக்கும் இரண்டாவது படம் இது. அதிலும் இந்தப் படத்தில் நாங்கள் இருவரும் காவல்துறை அதிகாரிகளாக நடித்திருப்பது மகிழ்ச்சியையும் பெருமையையும் அளிக்கிறது. அர்ஜுன் மிகவும் இனிமையானவர், நட்பாகப் பழகக்கூடியவர். படப்பிடிப்புத் தளத்தில் எப்போதும் ஜாலியாகவும் கலகலப்பாகவும் இருப்பார். அவருடன் தீவிரமான காட்சிகளில் நடிப்பதுகூட சில நேரங்களில் சவாலாக இருக்கும். அவருடன் மீண்டும் பணியாற்றியது சிறப்பான அனுபவம். இன்னொரு படத்திலும் அவருடன் இணைந்து நடிக்க ஆவலாக இருக்கிறேன்.

இந்தப் படத்திற்காக சுமார் 35 நாட்கள் தொடர்ந்து பணியாற்றினேன். நான் இதுவரை பணியாற்றிய குழுக்களில் மிகவும் திட்டமிட்டும், நேரத்தை வீணாக்காமலும், திறமையாகவும் பணியாற்றிய குழு இதுதான்.

படக்குழுவில் நிறைய பெண்கள் இருந்தது கூடுதல் மகிழ்ச்சியாக இருந்தது. குடும்பத்துடன் குழந்தைகளையும் அழைத்துச் சென்று ரசிக்கக்கூடிய வகையில் படம் இருக்கும். திரையரங்கிலிருந்து வெளியே வரும்போது ஒரு சிறந்த திரைப்படத்தைப் பார்த்த அனுபவம் உங்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.

Summary

It was an honor to play a police officer Actress Sanjana Natarajan

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER