தொடர் சர்ச்சையில் தவெக எம்எல்ஏக்கள்! முதல்வரை சந்தித்த பெண் எம்எல்ஏக்கள் புறப்பட்டனர்!!தாத்தா கொடுத்த சொத்தில் பேரன் பங்குகோர முடியாது! உச்ச நீதிமன்றம் தீர்ப்புமாமல்லபுரத்தில் தவெக எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!துயரமான ஆட்சி; கும்பகர்ண தூக்கத்தில் அரசு! எடப்பாடி பழனிசாமி விமர்சனம்!தவெக எம்எல்ஏக்கள் 3 நாள்கள் தனியார் விடுதியில் தங்க ஏற்பாடு?என்ன, நீதா அம்பானி குடிக்கும் தண்ணீர் பாட்டில் விலை ரூ.50 லட்சமா? உண்மை என்ன?ஆண் பல முறை திருமணம் செய்யலாம்! ஆனால்... பவன் கல்யாண் குறித்து ரேணு தேசாய்கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் பாவம்! மாணிக்கம் தாகூர்இரண்டு முறை புற்றுநோய் பாதிப்பு... முதன்முறையாக மனம் திறந்தார் சோனியா! சுயசரிதை புத்தகத்தில்சென்னையில் நேற்று மட்டும் 147 ரெளடிகள் கைது!ஐபிஎல் டிரேடிங்! பஞ்சாப் கிங்ஸில் இணைந்தார் ஹார்திக் பாண்டியா! மும்பையில் அர்ஷ்தீப்!மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்! நாளை (நவ. 12) இரவுக்குள் கரை திரும்ப அறிவுறுத்தல்!இன்று தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்: முதல்வர் விஜய் பங்கேற்கிறார்!2024-ஆம் ஆண்டு குரூப்-4 தோ்வு: வனக்காவலா் பதவிக்கு சான்றிதழ் சரிபாா்ப்பு பட்டியல் வெளியீடு!டாஸ்மாக் ஊழியா்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம்!பிரதமர் பதவிக்கு மன்மோகன் சிங்கை தேர்ந்தெடுத்தது ஏன்?: சுயசரிதையில் சோனியா தகவல்!உள்ளாட்சி அமைப்புகளின் மின் கட்டண நிலுவை ரூ.548 கோடி: உடனடியாக வசூலிக்க மின்வாரியம் நடவடிக்கை!தென்கிழக்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்புஅகல்விளக்கு பதிப்பகத்தின் வங்கிக் கணக்கை முடக்க உத்தரவு6,574 பணியிடங்கள்: குரூப் 4 தோ்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய இன்று கடைசி!

ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா தம்பதிக்கு என்ன ஆனது? வைரலாகும் யூகங்கள்

ஐஸ்வர்யா அர்ஜுன் - உமாபதி ராமையா தம்பதிக்கு என்ன ஆனது? என ரசிகர்கள் கேள்வி

ஐஸ்வர்யா - உமாபதி

ஐஸ்வர்யா - உமாபதி

Updated On :

சமூக வலைத்தள நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களைத் தொடர்ந்து கவனித்துவரும் ரசிகர்கள், நடிகை ஐஸ்வர்யா அர்ஜுன் - அவரது கணவர் உமாபதி ராமையா தம்பதிக்கு என்ன ஆனது என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

மேலும், அவர்களுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டிருக்குமோ என்றும் அச்சம் தெரிவித்து வருகிறார்கள்.

இவர்களைப் பற்றி எந்த செய்திகளும் வெளிவராமல், இவர்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் நடக்கும் விவகாரங்கள் மற்றும் அண்மையில் அர்ஜூன் வீட்டுத் திருமண விழா உள்ளிட்ட புகைப்படங்களைக் கொண்டே இவர்களது ரசிகர்கள், இவர்களைப் பற்றி பல்வேறு யூகங்களையும் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

அண்மையில் உமாபதி ராமையா பிறந்தநாளைக் கொண்டாடியிருக்கிறார். ஆனால், கடந்த ஆண்டுகளைப் போல, ஐஸ்வர்யா, சமூக வலைத்தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பதிவிடவில்லை. ஆனால், கடந்த ஆண்டு உமாபதி ராமையா புகைப்படத்தை இணைத்து பிறந்தநாள் வாழ்த்துகளை வெளியிட்டிருந்ததையும் ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதுபோல, அண்மைக் காலமாக, இருவரது சமூக வலைத்தளக் கணக்குகளிலும், இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்களை பதிவிடவில்லை என்றும், இதற்கு முன்பு அதிகமான புகைப்படங்களை இருவரும் ஷேர் செய்வது வழக்கம் என்றும் கூறுகிறார்கள்.

இந்த யூகம் எங்கே தொடங்கியது என்றால், அர்ஜூன் மகள் அஜ்சனாவின் திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. அப்போது, அர்ஜூன், ஐஸ்வர்யா உள்ளிட்டோர் பங்கேற்றிருந்த நிலையில், உமாபதியோ, அவரது குடும்பத்தாரோ இந்த திருமணத்தில் பங்கேற்கவில்லை என்பது புகைப்படங்கள் வாயிலாக தெரிய வந்தது.

அது மட்டுமில்லை, திருமணக் கொண்டாட்டப் புகைப்படங்களில், ஐஸ்வர்யா, தன்னுடைய நிச்சயதார்த்த மோதிரத்தையும் அணிந்திருக்கவில்லை என்பதையும் ஸும் செய்து பார்த்துக் கண்டுபிடித்து சொல்லிவிட்டிருக்கிறார்கள்.

எனவே, இவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு ஏற்பட்டிருக்கிறது என்று ரசிகர்கள் யூகிக்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை, இவ்வாறு புரளிகளைக் கிளப்ப வேண்டாம் என்று தம்பி ராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.

சென்னையில் இருவரும் தனியாக ஒரு வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள். சென்னையில், வெகு விமரிசையாக நடைபெறும் திருமண வரவேற்பில் பங்கேற்கலாம் என்பதால், இத்தாலி செல்லவில்லை என்றும் அதனை பெரிதுப்படுத்தி புரளிகளைக் கிளப்ப வேண்டாம் என்றும் தம்பி ராமையா கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

What happened to the couple Aishwarya Arjun and Umapathy Ramaiah? Speculations go viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.