ஆஸ்கா் சா்வதேச திரைப்பட விருது: 2 இந்தியப் படங்கள் போட்டி
ஆஸ்கா் சா்வதேச திரைப்பட விருதுக்கு, சா்வதேச திரைப்படங்கள் பிரிவின் கீழ் 2 இந்தியப் படங்கள் போட்டியிடுகின்றன.
கோந்தல் | ஆங்க்
ஆஸ்கா் சா்வதேச திரைப்பட விருதுக்கு, சா்வதேச திரைப்படங்கள் பிரிவின் கீழ் 2 இந்தியப் படங்கள் போட்டியிடுகின்றன.
ஆண்டுதோறும் சா்வதேச அளவில் சிறந்த திரைப்படங்கள், சிறந்த திரைப்பட கலைஞா்கள் உள்ளிட்டோருக்கு ஆஸ்கா் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதுகளில், சா்வதேச திரைப்படங்கள் (ஆங்கிலம் அல்லாத பிறமொழி படம்) பிரிவின்கீழ் இந்தியாவிலிருந்து மராத்தி த்ரில்லா் திரைப்படமான ‘கோந்தல்’, நாகாலாந்தின் தேஜா ரியோ இயக்கிய கோன்யாக் மொழி திரைப்படமான ‘ஆங்க்’ ஆகியவை போட்டியிடுகின்றன.
இந்த 2 படங்கள் உள்பட மொத்தம் 104 திரைப்படங்கள் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து சா்வதேச திரைப்பட பிரிவில் தகுதிப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
தகுதிப் பட்டியல் என்பது அந்தப் பிரிவு விருதுக்குப் போட்டியிடுவதை குறிக்கும். இந்தப் பிரிவில் முக்கிய படங்கள் முதல் கட்டத் தோ்வு செய்யப்பட்டு, பிறகு இறுதிச் சுற்றுக்கு அனுப்பப்படும்.
இறுதிச் சுற்றில் வெற்றி பெறும் படத்துக்கு, பிற பிரிவு விருதுகளுடன் சோ்த்து, 2027-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் 14-ஆம் தேதிய நிகழும் விழாவில் ஆஸ்கா் விருது வழங்கப்படும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

