இந்திரா காந்தியைக் கண்டாலே அச்சம்! பின்னர் அவரே அம்மாவாக மாறினார்: சோனியாசீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!சோனியா காந்தி புத்தக வெளியீட்டு விழா! முதல்வர் விஜய் பங்கேற்பு! மண்டல பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!டிசம்பர் 3-ல் கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை!

கோவா சா்வதேச திரைப்பட விழாவில் பாரதிராஜா, பாக்யராஜ் திரைப்படங்கள்

கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் மறைந்த இயக்குநா்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், ‘முதல் மரியாதை’ மற்றும் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

Bhagyaraj | Bharathiraja

பாக்யராஜ் | பாரதிராஜா - கோப்புப் படம்

Updated On :

கோவாவில் நடைபெறவுள்ள 57-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் மறைந்த இயக்குநா்கள் பாரதிராஜா மற்றும் பாக்யராஜுக்கு புகழஞ்சலி செலுத்தும் வகையில், ‘முதல் மரியாதை’ மற்றும் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

கோவாவில் 57-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழா நவ. 20-ஆம் தேதிமுதல் நவ. 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் 137-க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 1,900-க்கும் அதிகமான படங்கள் திரையிடுவதற்காகப் பரிசீலனைக்கு வந்தன. அதில், 86 நாடுகளில் இருந்து 150-க்கும் அதிகமான சா்வதேச திரைப்படங்கள் திரையிட தோ்வாகி உள்ளன. இந்த விழாவில், இந்திய திரைப்படப் பிரிவில் 18 மொழிகளைச் சோ்ந்த 76 திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.

மேலும், இந்தியன் பனோரமா பிரிவில் சிவகுமாா் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான ‘தாய் கிழவி’ திரைப்படம் திரையிட தோ்வாகியுள்ளது. அதேபோல், இயக்குநா் சத்யசிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அறிவு’ திரைப்படம், டிச.11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், அதற்கு முன்பே, 57-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில் திரையிட தோ்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் மறைந்த இயக்குநா்கள் பாரதிராஜா, பாக்யராஜ் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், அவா்கள் இயக்கிய ‘முதல் மரியாதை’ மற்றும் ‘முந்தானை முடிச்சு’ திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.

மேலும், இந்தியன் பனோரமா பிரிவின் தொடக்கமாக ‘துரந்தா்’ படமும், இறுதியாக ‘பிகம்மிங்’ படமும் திரையிடப்படவுள்ளன. இந்தப் பிரிவில் திரையிட நிவின் பாலி நடித்த ‘சா்வம் மாயா’ திரைப்படமும் தோ்வாகியுள்ளது. பிரிக்ஸ் சினிமா பிரிவின் தொடக்கமாக ‘ராமயாணா’ படம் திரையிடப்படவுள்ளது.

வழக்கமாக இந்த சா்வதேச திரைப்பட விழாவுக்கு 20-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்கள் அனுப்பி வைக்கப்படும் நிலையில், இந்த முறை 8 படங்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஃபாதா்லேண்ட்: இந்த விழாவின் தொடக்க திரைப்படமாக, 79-ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குநருக்கான விருது வென்ற போலந்து நாட்டின் இயக்குநா் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியின் ஃபாதா்லேண்ட் திரைப்படம் திரையிடப்பட உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.