தனுஷ் மகன் எப்போது நடிப்பார்? சுவாரஸ்யமாகப் பேசிய மம்மூட்டி!

ஓம் நிகழ்வில் பேசிய நடிகர் மம்மூட்டி....

நடிகர்கள் மம்மூட்டி, தனுஷ்.

Updated On :

நடிகர் மம்மூட்டி ஓம் திரைப்பட விழாவில் அப்படம் குறித்து பேசியுள்ளார்.

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள 'ஓம்' திரைப்படம் வருகிற நவ. 20 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நடிகர்கள் தனுஷ், மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பேசிய நடிகர் மம்மூட்டி, “பேரன்பு திரைபடத்திற்குப் பின் நான் தமிழில் நடிக்கவில்லை. யாராவது நல்ல கதையுடன் தேடி வருவார்கள் எனக் காத்திருந்தேன். ஆனால், யாரும் என்னைக் கண்டுகொள்ளவில்லை. ஓம் திரைப்படத்திற்கு அழைத்த போது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியிடம் காத்திருக்கச் சொன்னேன். இப்போது திரைப்படமே வெளியாகவுள்ளது.

இப்படத்திற்காக என்னிடம் 40 நாள்கள் கால்சீட் கொடுங்கள் என்றனர். ஆனால், 6 மாதமாக வேலை வாங்கிவிட்டனர். ஓம் திரைப்படத்தில் எனக்கும் ஜோடி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஏற்கனவே, நடிகர் ரஜினிகாந்துடன் நடித்துள்ளேன். நடிகர் தனுஷுடன் நடித்து முடித்தாகிவிட்டது. தனுஷின் மகன் எப்போது நடிக்க வருவார் எனத் தெரியவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

Actor Mammootty spoke about the film 'Om' at the film festival.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.