இந்தியன் பனோரமா பிரிவில் திரையிட தேர்வாகியுள்ள துரந்தர், சர்வம் மாயா!

என்எஃப்டிசி நடத்தும் 57ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா குறித்து...

Poster for the film *Sarvam Maya*, featuring Thurandhar

துரந்தர், சர்வம் மாயா படத்தின் போஸ்டர் - படங்கள்: இன்ஸ்டா / ரன்வீர் சிங், நிவின் பாலி.

Updated On :

என்எஃப்டிசி நடத்தும் 57ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா வரும் நவ.20 முதல் நவ.28ஆம் தேதி வரைக்கும் கோவாவில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திரைப்பட விழாவில் 137க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 1,900க்கும் அதிகமான படங்கள் பரிசீலனைக்கு வந்தன. இதில் 86 நாடுகளில் இருந்து 150க்கும் அதிகமான சர்வதேச படங்கள் திரையிட தேர்வாகியுள்ளன.

இந்திய திரைப்பட வளர்ச்சிக் கழகம் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச திரைப்பட விழாவினை நடத்தி வருகிறது. இதில் உலகில் உள்ள தலைசிறந்த படங்கள் திரையிட தேர்வாகிறது.

இதனால், இந்திய ரசிகர்களின் பார்வையும் கலைத்திறமையும் முன்னேறும். புகழ்பெற்ற இயக்குநர்களுடனான கலந்துரையாடல் வருங்கால இயக்குநர்களுக்கு பொக்கிஷமாகவும் மாறும் வாய்ப்பிருக்கிறது.

இந்த்த திரைப்பட விழாவில் தொடக்கமாக போலந்து நாட்டின் இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி இயக்கிய ஃபாதர்லேண்ட் (Fatherland) என்ற படம் திரையிடப்படுகிறது.

விழாவின் மத்திய நாளில் ’ஐ மேட்டர்’ என்ற படமும் இறுதியாக 'வி ஆர் ஆல் ஸ்டிரேஞ்சர்ஸ்' என்ற படமும் திரையிடப்படவிருக்கிறது. பிரிக்ஸ் சினிமாவின் தொடக்கமாக ராமாயணா படம் திரையிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பனோரமா பிரிவில் தொடக்கமாக துரந்தர் படமும் இறுதியாக பிகம்மிங் என்ற படமும் திரையிடப்படும். நிவின் பாலி நடித்த சர்வம் மாயா படமும் இந்தப் பிரிவில் திரையிட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏழு புதிய சர்வதேச படங்கள் சிறந்த அறிமுக படம் என்ற பிரிவில் போட்டியிடுகின்றன. கோவா மாநிலத்தின் முதல்வர் பிரமோத் சாவந்த் தொடக்கி வைத்தார்.

இந்த விழாவினை நடத்தும் இயக்குநர் அசுதோஷ் கோவாரிகர், ’எல்லைகள் இல்லா கதைகள்’ என்ற மைய கருவை முன்னிருத்தி திரைப்படம் எப்படி பார்வையாளர்களிடம் கலாச்சாரம், மனித உணர்வுகளை கதைகள் வழியாக உண்டாக்குகிறது என்பதை விவரித்து பேசினார்.

Summary

'Dhurandhar' and 'Sarvam Maya' have been selected for screening in the Indian Panorama section at IFFI

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.