மைசூரில் ரூ.729 கோடியில் திரைப்பட நகரம்! கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!
மைசூரில் ரூ.729 கோடியில் சர்வதேச திரைப்பட நகரம் அமைக்கும் திட்டம் குறித்து...

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் - கோப்புப் படம் | ANI
கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில், ரூ. 729 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான திரைப்பட நகரம் அமைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
கன்னடத் திரைப்படத்துறை சமீபகாலமாகத் தொடர்ந்து சர்வதேச அளவில் கவனம் பெற்று வருகிறது. கே.ஜி.எஃப்., காந்தாரா போன்ற படங்கள் விருதுகளைக் குவித்ததுடன் வசூல் ரீதியாகவும் சர்வதேச அளவில் வெற்றி பெற்றுள்ளன.
இந்த நிலையில், மைசூரில் உள்ள நஞ்சன்கூடு தாலுக்காவில் ரூ. 729 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான திரைப்பட நகரம் உருவாக்கப்படவுள்ளது. திரைப்படத் தயாரிப்பு மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு உள்கட்டமைப்பை வழங்குவதற்காக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அரசு மற்றும் தனியார் பங்களிப்பின் மூலம் இம்மாவு தொழிற்பேட்டையில் சுமார் 160 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திரைப்பட நகரம் அமைக்கப்படவுள்ளது.
இத்துடன், மகாதேவபுரா, யஸ்வந்த்பூர் மற்றும் பயத்தாராயணபுரா சட்டப்பேரவைத் தொகுதிகளில் தலா ரூ.90 கோடி மதிப்பீட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளுக்கும் மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Karnataka state cabinet has approved the establishment of an international-standard film city in the Mysuru district, at a cost of Rs 729 crore.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


