சர்வதேச மேடையில் கோலிவுட்! ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட 'டோரதி' தேர்வு
ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிட டோரதி திரைப்படம் தேர்வானது குறித்து...

டோரதி படத்தின் போஸ்டர்.
ரோட்டர்டேம் சர்வதேச திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிட டோரதி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி பாராட்டுகளைப் பெற்ற திரைப்படம் டோரதி. இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
மதுரையைப் பின்னணியாகக் கொண்டு 1990-களில் நடக்கும் கதையாக எடுக்கப்பட்ட இந்தப் படம், டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு பாராட்டுகளைப் பெற்றது.
இப்படம் பாலின அடையாளங்களையும் அதனைச் சமூகம் எதிர்கொள்ளும் விதத்தையும் மையப்படுத்தி உருவாகியுள்ளது.
இந்த நிலையில், நெதர்லாந்து நாட்டில் நடைபெறவுள்ள சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த ரோட்டர்டேம் திரைப்பட விழாவில் லைம்லைட் பிரிவில் திரையிட டோரதி திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
Summary
Dorothy gets selected to the prestigious Rotterdam Film Festival at IFFR in the Limelight Section
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

