பாகுபலி - 2 வசூலைக் கடந்த ராமாயணா!

பாகுபலியின் வசூலைக் கடந்து சாதனை புரிந்த ராமாயணா....

Updated On :

ராமாயணா திரைப்படம் பாகுபலி - 2 வசூலை முறியடித்துள்ளது.

நிதிஷ் திவாரி இயக்கத்தில் தீபாவளி வெளியீடாகத் திரைக்கு வந்த ராமாயணா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. முதல் பாகத்தில் ராவணனான நடிகர் யஷ் சீதையான சாய் பல்லவியைக் கடத்திக்கொண்டு போவதுடன் நிறைவடைந்துள்ளது.

அட்டகாசமான விஎஃப்எக்ஸ் உருவாக்கங்கள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட ராமாயணா இதுவரை உலக அளவில் ரூ. 1790 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில், தமிழகத்தில் மட்டும் இப்படம் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்தச் சாதனையைச் செய்த முதல் பாலிவுட் திரைப்படம் என்கிற பெயரையும் பெற்றுள்ளது.

இந்த நிலையில், பாகுபலி - 2 திரைப்படத்தின் ஒட்டுமொத்த வசூலான ரூ. 1770 கோடியை ராமாயணா கடந்து அச்சாதனையை முறியடித்துள்ளது. இந்த மிகப்பெரிய வெற்றியால் இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

The Ramayana film has surpassed the box office collection of Baahubali 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.