
எனக்கே பொறாமையா இருக்கு... நடிகர் ரஜினியின் புரோமோ!
ஜெயிலர் - 2 புரோமோ வெளியீடு...

நடிகர் ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்த் பேசிய ஜெயிலர் - 2 புரோமோ வெளியாகியுள்ளது.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஜெயிலர் - 2 திரைப்படத்துக்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. மேலும், இப்படம் 2.45 மணிநேரம் கால அளவு கொண்ட திரைப்படமாகத் திரைக்கு வருகிறது.
இந்த நிலையில், இப்படத்திற்கு இசைவெளியீட்டு விழாவை பெரிதாக நடத்தாமல் படக்குழுவினர் கலந்துகொண்ட சிறப்பு சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதில், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நெல்சன் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி வருகிற அக். 11 ஆம் தேதி மாலை 6.30 - 9.30 மணிவரை சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகவுள்ளது. தற்போது, இதன் புரோமோவை வெளியிட்டுள்ளர்.
A promo for Jailer 2 featuring actor Rajinikanth has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






