தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

உயிரிழப்பதற்கு 3 மணிநேரம் முன்பு... நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பிய நானா படேகர்!

உயிரிழப்பதற்கு முன்னதாக நானா படேகர் நண்பரை அழைத்தது பற்றி...

addened by the passing away of veteran actor Thiru. Nana Patekar

பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு - எக்ஸ்

Published On :

பாலிவுட் நடிகர் நானா படேகர் உயிரிழப்பதற்கு 3 மணிநேரத்துக்கு முன்னதாக, தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவரது நண்பருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார்.

ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், அவர் உயிரிழப்பதற்கு சரியாக மூன்று மணிநேரத்துக்கு முன்னதாக நள்ளிரவு 2.30 மணியளவில், அவரது நண்பருக்கு தனக்கு உடல்நிலை சரியில்லை என்று குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால், நள்ளிரவு என்பதால் அவரது நண்பர் அதைப் பார்க்கவில்லை.

இதுதொடர்பாக நானா படேகர் அழைத்துச் செல்லப்பட்ட மருத்துவர் ஒருவர் கூறுகையில்,

”சுமார் 2:30 மணியளவில், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று அவர் தனது நண்பருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் நள்ளிரவு நேரம் என்பதால், அந்த நண்பரால் அந்தச் செய்தியைப் பார்க்க முடியவில்லை. பின்னர், நண்பரைத் தொலைப்பேசியில் அழைத்து நானா படேகர் தகவல் கொடுத்துள்ளார்.

அந்த நண்பர் அதிகாலை 4 மணியளவில் அவரது வீட்டுக்குச் சென்றுள்ளார். அப்போது கடுமையான வியர்வையுடன் காணப்பட்ட படேகர், சுயநினைவை இழந்து கொண்டிருந்தார். தொடர்ந்து, மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டார்.

மருத்துவமனை கொண்டு வரப்பட்ட அவர், அசைவின்றி இருந்ததால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து, 'கார்டியாக் மசாஜ்' (இதயத்தை இயக்கும் மசாஜ் சிகிச்சை) அளிக்கப்பட்டது.

நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்தோம், ஆனால் அவர் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்படும்போதே உயிரிழந்திருந்தார். சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை அவருக்கு 'கார்டியாக் மசாஜ்' அளிக்கப்பட்டது, ஆனால் அவரைக் காப்பாற்ற முடியவில்லை. அதிகாலை 5:30 மணியளவில் படேகர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது” என்றார்.

Summary

Three hours before his death... Nana Patekar sent a text message to a friend

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.