தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கு 10 பேர் பலி; 21,655 பேர் பாதிப்பு! அமைச்சர் அருண்ராஜ்எஸ்ஐஆருக்கு எதிரான போராட்டம்: ஞானேஷ்குமாருக்கு Z+ பாதுகாப்பு அதிகரிப்பு!‘காலா’ பட நடிகர் நானா படேகர் காலமானார்!பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் காலமானார்!நவ.2 முதல் பத்திரப் பதிவில் காகிதமில்லா பயன்பாடு: தமிழக அரசு அரசாணை வெளியீடு வெங்காயம் விலை மேலும் குறையும்: மத்திய அரசு தமிழகத்தில் 1.7 கோடி ஸ்மார்ட் மீட்டர்: ஒப்பந்தப்புள்ளி கோரியது மின் வாரியம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு: அக்.1-இல் 18 வயது நிறைவடைந்தோருக்கு வாய்ப்புஇஸ்ரேலில் ஹமாஸ் தாக்குதலின் 3-ஆம் ஆண்டு நினைவு தினம் ஜேஇஇ முதன்மைத் தோ்வு 2026: ஐஐடி சோ்க்கையில் கணினி அறிவியலுக்கு மாணவா்கள் முன்னுரிமை விலைவாசி உயா்வுக்கு யாா் பொறுப்பு? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கேள்விவானொலி தலைமையகத்துக்குள் அத்துமீறி நுழைந்ததாக ராகுல் காந்தி உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு

மாதம் ரூ. 35 சம்பளம் முதல் கோடிகள் வரை! நானா படேகர் உருவாக்கிய சாம்ரஜ்ஜியம்!

எளிய பின்னணியில் வந்த நானா படேகரின் சொத்து மதிப்பு பற்றி...

Nana Patekar

நானா படேகர் - ANI

Published On :8 அக்டோபர் 2026, 12:35 pm IST

மறைந்த பாலிவுட் நடிகர் நானா படேகர், தொடக்க காலத்தில் மாதம் ரூ. 35 சம்பளத்துக்கு பணிபுரிந்த நிலையில், தற்போது கோடிக்கணக்கான சொத்துகள் கொண்ட சாம்ராஜ்ஜியதை உருவாக்கியுள்ளார்.

ஹிந்தி மற்றும் மராத்திய திரைப்பட உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த பிரபல நடிகர் நானா படேகர் (75) வியாழக்கிழமை அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

இவரின் மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், திரையுலக பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரூ. 35 முதல் கோடிகள் வரை

தனது தந்தை சொத்துகளை இழந்த நிலையில், குடும்பத்தின் பொருளாதார நிலை மோசமாக மாறியதாகவும், பசி மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பற்ற சூழலில் பள்ளிப் படிப்பின் போதே தான் திரைப்பட சுவரொட்டிகள் வரையும் பணிக்கு சென்றதாக ஒரு நேர்க்காணலில் நானா படேகர் தெரிவித்திருந்தார்.

13 வயதிலேயே நாள்தோறும் 8 கி.மீ. நடந்து சென்று சுவரொட்டிகள் வரையும் பணியைச் செய்ததாகவும், சம்பளமாக மாதம் ரூ. 35-ம், நாள்தோறும் ஒருவேளை உணவும் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

பின்னர், பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு, 1978 ஆம் ஆண்டு வெளியான ‘கமன்’ (Gaman) என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

அதைத்தொடர்ந்து ஹிந்தி மற்றும் மராத்திய மொழித் திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து, தனது இயல்பான நடிப்பு, அழுத்தமான வசன உச்சரிப்பு மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத் தேர்வு மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.

‘பரிந்தா’, ‘கிராந்திவீர்’, ‘அக்னி சாக்‌ஷி’, ‘காமோஷி: தி மியூசிக்கல்’, ‘அப் தக் சப்பன்’, ‘அபஹரண்’, ‘வெல்கம்’, ‘நட்ஸம்ராட்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் அவர் நடித்த கதாபாத்திரங்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

பின்னர் அவரது தொழில் வாழ்க்கை வளர்ச்சியடைந்த நிலையில், பிற்காலங்களில் ஒரு படத்துக்கு ரூ. 2 முதல் 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தனியார் நிகழ்ச்சிகள், விளம்பரங்கள் போன்றவை மூலமும் அவர் வருமானம் ஈட்டினார்.

தொடர்ந்து எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்த நானா படேகர், பல ஆண்டுகளுக்கு முன்பு மும்பை அந்தேரியில் ரூ. 1.1 லட்சத்துக்கு அவர் வாங்கிய ஒரு படுக்கையறை கொண்ட அடுக்குமாடி குடியிருப்பில்தான் வசித்து வந்தார். தற்போது அந்த வீட்டின் மதிப்பு ரூ. 3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், கோவாவில் ஒரு வீடும், புணேவில் 27 ஏக்கர் பரப்பளவு கொண்ட பண்ணை வீடும் நானா படேகர் வைத்துள்ளார். புணே பண்ணை வீட்டைச் சுற்றியும் கோதுமை மற்றும் நெல் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார்.

இவரின் கார் சேகரிப்பும் மற்ற பாலிவுட் நட்சத்திரங்களை ஒப்பிடுகையில் குறைவே. ஆடி க்யூ 7, மஹிந்திரா ஜீப், ஸ்கார்பியோ ஆகிய கார்கள் வைத்துள்ளார்.

இன்று அவருடைய சொத்து மதிப்பு ரூ. 80 கோடி வரை இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Summary

From a monthly salary of Rs. 35 to crores—the empire built by Nana Patekar

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.