சிஜேபி போராட்டம்! பத்திரிகையாளர்கள், இளைஞர்கள், வழக்குரைஞர்கள் கைது! இடைத்தேர்தல் வெற்றி விஜய் அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம்: வைகோதமிழ்நாட்டில் இருக்கும் பாஜகதான் தவெக! - கனிமொழி விமர்சனம் பிரதமர் மோடி சென்னை வருகை: அக்.11-ல் போக்குவரத்து மாற்றம் சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!

கொடூரனின் மரணம்... நானா படேகர் பற்றிய தனுஸ்ரீ தத்தாவின் கருத்துக்கு திரைப்பட தொழிலாளர் சங்கம் கண்டனம்!

மறைந்த நடிகர் நானா படேகர் பற்றிய தனுஸ்ரீ தத்தாவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்த ஏஐசிடபிள்யூஏ குறித்து...

Tanushree Dutta; AICWA president; Nana Patekar

தனுஸ்ரீ தத்தா, ஏஐசிடபிள்யூஏ தலைவர், நானா படேகர் - படங்கள்: எக்ஸ் / தனுஸ்ரீ தத்தா, ஏஐசிடபிள்யூஏ

Published On :

மறைந்த நடிகர் நானா படேகர் பற்றிய தனுஸ்ரீ தத்தாவின் கருத்துக்கு ஏஐசிடபிள்யூஏ (அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம்) கண்டனம் தெரிவித்துள்ளது.

கோவாவில் உள்ள தனது இல்லத்தில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி நடிகர் நானா படேகர் கடந்த வியாழக்கிழமை (அக். 8) அதிகாலை காலமானார்.

நடிகை தனுஸ்ரீ தத்தா பாலிவுட் நடிகர் நானா படேகர் மறைவு குறித்து, “ஒருவர் இறந்து விட்டால் அவரது குற்றங்கள் ஒன்றும் காணாமல் போகிவிடாது” எனவும் கொடூரன் இறந்துவிட்டான் எனவும் கடுமையாகப் பேசியிருந்தார்.

இது குறித்து ஏஐசிடபிள்யூஏ (அகில இந்திய திரைப்பட தொழிலாளர் சங்கம்) கண்டனம் தெரிவித்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நானா படேகர் மிகவும் மதிக்கதக்க குடிமகன். அவர் சமூக ஆர்வலராக இருந்துள்ளார். பத்மஸ்ரீ விருது வென்றுள்ளார். ஒட்டுமொத்த நாடும் அவரது இறப்பில் அதிர்ச்சியில் இருக்கிறது. ஆனால், தனுஸ்ரீ பேசியது அவரது மனநிலையைப் பிரதிபலிக்கிறது.

மோசமான விளம்பரத்துக்காக தனுஸ்ரீ தத்தா அப்படியான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இந்த மாதிரி இந்திய நாட்டின் திரைத்துறை வரலாற்றிலேயே யாரும் பேசியதில்லை.

ஒருவரின் மரணத்துக்குப் பிறகு இப்படி பேசுவதை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது நாட்டில் உள்ள அனைவருக்கும், அவரது குடும்பத்திற்கும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது. திரைத்துறையில் இருந்து இப்படி பேசுவது அதிர்ச்சி அளிக்கிறது. இது திரைத்துறையின் கலாசாரம் அல்ல; தனுஸ்ரீ தத்தாவின் கலாசாரம். அவரது வார்த்தைகளுக்கு எங்களது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம் எனக் கூறியுள்ளார்.

Summary

AICWA condemns Tanushree Dutta’s ‘Evil Dead’ remark about Nana Patekar: ‘Reflects your small mindset’

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.