சென்னை நீலாங்கரை இல்லத்தில் முதல்வர் விஜய்யுடன் ராகுல் காந்தி சந்திப்பு!சென்னை வந்தார் ராகுல் காந்தி!சிஜேபி போராட்டம்: விமானத்திலேயே கைது செய்யப்பட்ட அபிஜீத் தீப்கே!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 உயர்வு!ஜந்தர் மந்தரில் போராட்டம்: 150 சிஜேபி ஆதரவாளர்கள் கைது!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ வழித்தடத்தில் இணைப்பு பேருந்து சேவை: மாநகர போக்குவரத்து கழகம்இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு இஸ்ரேலின் உயரிய விருது அறிவிப்புஏா் இந்தியா, ஆகாசா ஏா் விமானக் கட்டணங்களும் உயா்வுஎதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி இன்று சென்னை வருகை: மாணவா் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்கிறாா்திருக்கோயில் பணியாளா்களுக்கான திருமணக் கடன் உயா்வு: தமிழக அரசு அரசாணைபிரதமா் மோடி நாளை சென்னை வருகை: 22,000 போலீஸாருடன் ஐந்தடுக்கு பாதுகாப்பு

பாட்ஷா 2, பேட்ட 2 சம்மதிக்காமல் ஜெயிலர் 2 மட்டும் எதற்காக? ரஜினி விளக்கம்!

ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது...

Rajinikanth in the movie Jailer 2.

ஜெயிலர் 2 படத்தில் ரஜினிகாந்த். - படம்: யூடியூப் / சன் பிக்சர்ஸ்

Published On :

ஜெயிலர் 2 சூப்பர் ஷோ நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த், “எத்தனையோ வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகம் எடுக்க பலர் கூறினாலும் எனக்கு உடன்பாடில்லை... ஆனால், ஜெயிலர் 2வில் நடிக்கத் தோன்றியது” எனக் கூறியுள்ளார்.

ஜெயிலர் முதல் பாகத்தின் வெற்றியினால் இதன் இரண்டாம் பாகத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். இந்தப் படம் வரும் அக்.15ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இந்தப் படத்தில் ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு முக்கிய கதாபாத்திரங்களிலும், மோகன் லால், ஷிவராஜ் குமார் சிறப்புத் தோற்றத்திலும் நடித்துள்ளார்கள்.

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறாததால், உள்ளரங்கில் அனைத்து நடிகர் நடிகைகள் வைத்து சூப்பர் ஷோ என புரமோஷன் செய்யப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த் பேசியிருப்பதாவது:

பொதுவாக எனக்கு இரண்டாம் பாகம் எடுப்பதில் உடன்பாடு இருப்பதில்லை. ஏனெனில், முதலில் ஒரு பாகத்தை எடுப்பார்கள். பின்னர் சிறிது மசாலவை தூவி இரண்டாம் பாகம் என எடுப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இருப்பதில்லை.

பலமுறை பாட்ஷா 2 எடுக்க என்னை தொடர்பு கொண்டார்கள். பிறகு பேட்ட 2 படத்தில் விஜய் சேதுபதி என்னை பழிவாங்க காத்திருக்கிறார் என்பது போல் கதையைக் கூறினார். ஆனாலும் எனக்கு உடன்பாடு இல்லை. அதனால் விட்டுவிட்டேன்.

ஜெயிலர் படம் நன்றாக ஓடியது. பின்னர் அதனை ஓடிடியில் பார்த்தேன். அப்போது ஜெயிலர் முத்துவேல் பாண்டியனை வர்மா பலமுறை எச்சரிப்பார். இது மிகப்பெரிய நெட்ஒர்க் என்றெல்லாம் சொல்லுவார். 3 கன்டென்யனரில் ரூ.1,000 கோடி என பல விஷயங்கள் அப்படியே இருக்கின்றன. நல்ல வயதான கதாபாத்திரம் கிடைப்பது வேறு அரிதானது. அதனால், நெல்சனிடம் இது பற்றி கூறினேன்.

முதலில் நெல்சன் ’இதெல்லாம் வேண்டாம் சார்; எல்லாம் புழிந்து எடுத்தாகிவிட்டது’ என்றார். பின்னர், நானும் விட்டுவிட்டேன். ஒரு மாதம் கழித்து நெல்சன் திரும்பவும் வந்து, ‘ஜெயிலர் 2 எடுக்கலாம் சார்’ என்றார். அதற்காக அவர் தெலுங்கு படத்தை எல்லாம் விட்டு எனக்காக உட்கார்ந்து கதையை உருவாக்கி எடுத்துள்ளார். திரையரங்குகளில் படத்தைப் பாருங்கள்; உங்களுக்குப் பிடிக்கும் எனக் கூறியுள்ளார்.

Summary

Rajinikanth reveals why he agreed to Jailer 2 after rejecting Baashha 2 and Petta 2: 'One scene...'

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.