தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

சரக்கு இல்லையென்றால்... கவனம் பெறும் ரஜினிகாந்த் பேச்சு!

ஜெயிலர் - 2 குறித்து ரஜினிகாந்த்....

நடிகர் ரஜினிகாந்த்

Published On :

நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் - 2 திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படம் அக்டோபர் 15 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில், ரஜினியுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ளனர்.

முதல் பாகம் கொடுத்த பெரிய வெற்றியால் இரண்டாம் பாகம் மீது எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இப்படத்தின் படக்குழுவினர் சந்தித்து பேசிய விடியோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.

நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், “ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என என்னிடம் வந்தால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். காரணம், சரக்கு இல்லையென்றால்தான் அந்தப்பக்கம் போவார்கள் என்கிற எண்ணம் இருந்தது. பாட்ஷா, பேட்ட திரைப்படங்களின் இரண்டாம் பாகத்தின் கதையை என்னிடம் கொண்டு வந்தனர். இரண்டின் கதையும் நன்றாக இருந்தாலும் ஏதோ முதல் பாகத்தின் தாக்கம் குறைவது போல் இருந்ததால் நான் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால், ஜெயிலர் திரைப்படத்தில் வர்மா கதாபாத்திரம் எனக்குப் பின்னால் பெரிய கூட்டமே இருக்கிறது என்பதும் மூன்று கண்டெயினர் லாரிகள், சிறைச்சாலையில் இருந்த ரௌடிகள் என முதல் பாகத்திலிருந்து கதைகளை உருவாக்க நிறைய இடங்கள் இருந்தன. அதனால், ஜெயிலர் - 2 திரைப்படத்தைத் திட்டமிட்டோம். விஷயம் இருக்கிறது என்பதால் அதை விடாமல் சேலஞ்ச் செய்திருக்கிறோம்.

இயக்குநர் நெல்சன் நீண்ட காலம் எடுத்துக்கொண்டு இப்படத்திற்கான கதை மற்றும் உருவாக்க பணிகளில் இருந்தார். கடுமையான உழைப்பைச் செலுத்தியிருக்கிறார். நான் இன்னமும் முழுமையாகத் திரைப்படத்தைப் பார்க்கவில்லை. இப்படத்திலும் ஒரு நடிகர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். அவருடன் நடிக்கும் போது சிரித்துக்கொண்டே இருந்தேன். அப்படி, நான் சிரிப்பது நடிகர் கவுண்டமணியுடன் நடிக்கும்போது மட்டும்தான். நடிகர்கள் வித்யா பாலன், சுரஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு, மிர்ணா ஆகியோர் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருக்கின்றனர். வித்யா பாலனுடன் தனியாக ஒரு திரைப்படம் நடிக்க ஆசை இருக்கிறது. இந்தப் பாகத்திலும் நடனமாட நடிகை தமன்னாவை கூப்பிடலாமா என நெல்சனிடம் கேட்டேன். உங்கள் விருப்பத்திற்காக பயன்படுத்த முடியாது என்றார். எனக்காகவா கேட்கிறேன்? எல்லாம் ரசிகர்களுக்காத்தானே... எஸ். ஜே. சூர்யா உண்மையிலேயே ஒரு நடிப்பு அரக்கன்தான். ரம்யா கிருஷ்ணன் நாளுக்கு நாள் அழகாகிக்கொண்டே இருக்கிறார். அனிருத் சிறப்பாக ஒருபடத்தைக் கணிப்பார். அவர் சொன்னால் சரியாக இருக்கும். இப்படத்திற்கு ஆதரவளிக்கும் ரசிகர்களுக்கும் என் பெரிய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் ” எனக் கூறியுள்ளார்.

Actor Rajinikanth has spoken about the movie Jailer 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.