ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

புதிய கோணத்தில் எடுக்கப்பட்டுள்ள லவ் ஆல்வேஸ் இணையத் தொடர்!

லவ் ஆல்வேஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி குறித்து...

love always

லவ் ஆல்வேஸ் இணையத் தொடரில் கெளரி கிஷன். - படம்: எக்ஸ்

Published On :

கெளரி கிஷனின் லவ் ஆல்வேஸ் இணையத் தொடரின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரி​ய​ இணையத் தொடரான, ஹியர் வி கோ அகைன் என்ற ​தொடரைத் தழுவி எடுக்கப்பட்டுள்ள தொடர் லவ் ஆல்​வேஸ். இதில் கெளரி கிஷன் பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தத் தொடரை 'வல்லமை தாராயோ', 'கே.டி என்கிற கருப்புதுரை' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் மதுமிதா இயக்கியுள்ளார்.

மேலும் இந்தத் தொடரில், ரம்ஜான் முகமது, ஜெயபிரகாஷ், ஜெயசுதா மற்றும் மாயா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனனர். லவ் ஆல்வேஸ் தொடர் அக். 30 ஆம் தேதி வெளியாகிறது.

காதல், குடும்பம் மற்றும் நகைச்சுவை கலந்து எடுக்கப்பட்டுள்ள இந்தத் தொடர், வயது பின்னோக்கிச் செல்லும் கற்பனைக் கதையாக உருவாகியுள்ளது.

பிரிவதற்கு தயாராக இருக்கும் வயதான தம்பதியினர், திடீர் திருப்பத்தால் தங்களின் 20 வயது இளமைக் காலத்துக்குச் சென்று, தங்களை பரிசோதிக்கும் கதையாக இந்தத் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது.

புதிய கோணத்​தில், தலா 30 நிமிடங்கள் கொண்ட 8 எபிசோடுகள் அடங்கிய லவ் ஆல்வேஸ் இணையத் தொடர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளது.

Summary

The release date for Gouri Kishan web series Love Always has been announced

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.