போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் ஒளிபரப்பு குறித்து...

போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் - படம்: எக்ஸ்
போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடர் ஒளிபரப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காவல் நிலையத்தில் போலீஸ் - திருடன் இடையே நடக்கும் நிகழ்வுகளை மையப்படுத்தி, நகைச்சுவைக் கலந்து ஒளிபரப்பு செய்யப்பட்ட போலீஸ் போலீஸ் இணையத் தொடர் கடந்த மார்ச் மாதம் நிறைவடைந்தது.
கோன், சிதம்பரம், மணிவண்ணன் என மூன்று இயக்குநர்கள் இந்த இணையத் தொடரை இயக்கியிருந்தனர். ஜேம்ஸ் விக்டர், சரண் ராகவன் என இருவர் இசையமைத்திருந்தனர்.
போலீஸ் போலீஸ் தொடரின் முதல் பாகத்துக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது. இதற்கான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது.
ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகி வந்த போலீஸ் போலீஸ் தொடர் முதல் பாகத்தில், மிர்ச்சி செந்தில், ஜெயசீலன் தங்கவேல் முதன்மை பாத்திரங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் சுஜிதா தனுஷ், ஷபானா ஷாஜகான், சத்யா, வின்சென்ட் ராய் உள்பட பலர் நடித்திருந்தனர்.
முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள், போலீஸ் போலீஸ் தொடர் இரண்டாம் பாகத்திலும் நடிக்கின்றனர். புதியவர்களும் இணைந்துள்ளனர்.
போலீஸ் போலீஸ் தொடரின், முதல் பாகக் கதையின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் எடுக்கப்படுகிறது.
இந்த நிலையில், போலீஸ் போலீஸ் - 2 இணையத் தொடரின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
ஹார்ட் பீட் - 3 இணையத் தொடர் நிறைவடைந்த பிறகு, போலீஸ் போலீஸ் - 2 ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
An official announcement has been released regarding the streaming of the web series 'Police Police - 2'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


