மக்கள் காவலன் - தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல்?

மக்கள் காவலன் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...

Updated On :

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைக்க சிரமம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

நடிகர் மணிகண்டன் அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். இதன் பாடல்கள் வெளியாகி கவனம் பெற்றன.

நீலம் புரடக்‌ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இப்படம் டிச. 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இன்னும் இப்படத்திற்குத் தணிக்கைச் சான்றிதழ் கிடைக்கவில்லையாம்.

காவல்துறை சார்ந்த திரைப்படம் என்றாலும் சில அரசியல் கருத்துகள் மற்றும் வசனங்களால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்காமல் தாமதப்படுத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், சர்ச்சையான விஷங்களை நீக்கி மறுதணிக்கைக்கு அனுப்ப தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

It appears that the film Makkal Kaavalan, starring actor Manikandan, is facing difficulties in obtaining a censor certificate.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.