மணிகண்டன் பிறந்த நாள்... மக்கள் காவலன் அப்டேட்!
மக்கள் காவலன் திரைப்பட அப்டேட்..

நடிகர் மணிகண்டன் நடிப்பில் உருவான மக்கள் காவலன் திரைப்படத்தின் அப்டேட் போஸ்டர் வெளியாகியுள்ளது.
குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான மணிகண்டன் லவ்வர், குடும்பஸ்தன் என ஹாட்ரிக் வெற்றியைக் கொடுத்து அசத்தினார்.
தற்போது, அறிமுக இயக்குநர் சந்தோஷ் குமார் இயக்கத்தில் ’மக்கள் காவலன்' என்ற படத்தில் காவலதிகாரியாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார்.

நீலம் புரடக்ஷன்ஸ் மற்றும் பிர்லா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவான இந்தப் படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், இன்று நடிகர் மணிகண்டனின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில், இன்று மாலை 6 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
An update poster for the film Makkal Kavalan, starring actor Manikandan, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







