
ஜெயிலர் - 2 இரண்டாவது பாடல் அப்டேட்!
ஜெயிலர் - 2 திரைப்படத்தின் புதிய அப்டேட்...

இசையமைப்பாளர் அனிருத், இயக்குநர் நெல்சன்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான ஜெயிலர் - 2 திரைப்படத்தின் இரண்டாவது பாடலின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் - 2 திரைப்படம் உருவாகி வருகிறது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், ஹ்ரித்திக் ரோஷன் போன்றோரும் நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர்கள் வித்யா பாலன், எஸ்ஜே சூர்யா, சூரஜ் வெஞ்சரமூடு ஆகியோரின் கதாபாத்திர அறிமுக விடியோக்கள் கடந்த வாரம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான, ’அல்ல பொலேலோ’ வெளியாகி வைரலானது. தற்போது, இரண்டாவது பாடல் புரோமோ இன்று வெளியாகவுள்ளதாக அனிருத், நெல்சன் போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளனர். இப்படம் அக். 15 ஆம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
An update regarding the second song from the movie Jailer 2, starring actor Rajinikanth, has been released.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







