சசிகுமாரின் அடுத்த படம்..! தமிழில் அறிமுகமாகும் கன்னட இயக்குநர்!
கன்னட இயக்குநர் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்து...

சசிகுமார், ஹரி சந்தோஷ் - படங்கள்: இன்ஸ்டா / சசிகுமார், ட்ரைடென்ட் ஆர்ட்ஸ்
கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிக்கப்பட்டுள்ளது. கன்னட இயக்குநருக்கு இது முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் சசிகுமார் தற்போது நடிகராக மட்டுமே நடித்து வருகிறார். கடைசியாக இவரது நடிப்பில் ’மை லார்டு’ என்ற திரைப்படம் கடந்த பிப்ரவரியில் வெளியானது.
வதந்தி சீசன் 2 என்ற இணையத் தொடர் ஆகஸ்ட் 7ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியானது. ஃபிரீடம் திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. யாத்திசை இயக்குநருடன் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில், புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வெற்றிவேல், அயோத்தி படங்களைத் தயாரித்த ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பெயரிடப்படாத இந்தப் படத்தை கன்னட இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இந்தப் படத்தை 6 டைமன்ஷன்ஸ் ஃபிலிம் அண்ட் மீடியா பேனர் இணைந்து தயாரிக்கிறது.
ஹரி சந்தோஷ் கன்னடத்தில் அலேமரி (2012) படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே மாநில அரசின் விருதையும் வென்றார். பின்னர், விக்டரி 2, காலேஜ் குமார், பை டூ லவ் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.
Summary
Sasikumar's next to be directed by Kannada director Hari Santhosh
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


