ஆக்‌ஷன் காட்சிகளுக்கு சுபம்! விரைவில் முடியும் அயலி தொடர்!

நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடித்துவந்த அயலி தொடர் நிறைவு பெற்றவுள்ளது குறித்து...

அயலி தொடரில் தேஜஸ்வினி, ஆனந்த் செல்வன் - இன்ஸ்டாகிராம்

Updated On :

நடிகை தேஜஸ்வினி கெளடா நாயகியாக நடித்துவந்த அயலி தொடர் நிறைவு பெறவுள்ளது.

கடத்தல், குற்றப் பின்னணி, புலன் விசாரணை, விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் என திரைப்படத்துக்கு இணையாக ஒளிபரப்பாகி வந்த தொடர் நிறைவு பெற்றது.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு அயலி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இத்தொடரின் நாயகியாக தேஜஸ்வினி நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஆனந்த் செல்வன் நடித்து வருகிறார்.

காவல் துறை அதிகாரியான தேஜஸ்வினிக்கு இத்தொடரில் அதிகப்படியான ஆக்‌ஷன் காட்சிகள் கொடுக்கப்பட்டன. ஆனந்த் செல்வனுடன் இணைந்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தேஜஸ்வினி செய்யும் சாகசங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

அயலி தொடரில்...

அயலி தொடரில்...

அயலி தொடருக்கு முன்பு, ஜீ தமிழில் ஒளிபரப்பான வித்யா நம்பர் ஒன் என்ற தொடரில் தேஜஸ்வினி நடித்திருந்தார். அதில் படிப்பறிவை போராடிப் பெறத் துடிக்கும் கிராமத்துப் பெண்ணாக நடித்திருந்தார்.

அயலி தொடரில் இதற்கு மாறாக அதிரடியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இவர்கள் மட்டுமின்றி கவிதா, ஸ்வேதா, அக்‌ஷிதா போபையா, பப்லு பிருத்விராஜ், ரியா மனோஜ் ஆகியோரின் நடிப்பும் இத்தொடரின் விறுவிறுப்புக்கு காரணமாக அமைந்தது.

தாற்போது கதைக்களம் சுவாரசியமாக இல்லாததால், விரைவில் இத்தொடர் முடியலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இளம் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற இத்தொடர் தற்போது நிறைவு பெற்றுள்ளதாக சமூகவலைதளங்களில் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

தேஜஸ்வினியின் பயணம்

2016-ல் தெலுங்கு மொழியில் கோயிலம்மா என்ற தொடரில் அறிமுகமான தேஜஸ்வினி, 2018-ல் கன்னட மொழித் தொடரிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2019 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பின்னர் இவர் நடித்த வித்யா நம்பர் ஒன் என்ற தொடர் விமர்சன ரீதியாக மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தற்போது தமிழில் இவரின் மூன்றாவது தொடராக அயலி ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடர் ஜுன் 2ஆம் தேதி முதல் திங்கள் - வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளதாக ஜீ தமிழ் தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

Summary

serial actress Tejaswini Gowda Ayali has concluded in Zee tamil

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.