பிக் பாஸ் வீட்டில் 2 காதல் ஜோடிகள்! மறைமுகமாக சுட்டிக்காட்டிய முனியம்மா!
பிக் பாஸ் வீட்டில் 2 காதல் ஜோடிகள் உள்ளதை மறைமுகமாக சுட்டிக்காட்டிய பிக் பாஸ்...

முனியம்மா - எக்ஸ்
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் இரண்டு காதல் ஜோடிகள் இருப்பதாக காமன்மேன் நிகழ்ச்சியின் பிரதிநிதி முனியம்மா தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி 5வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கான ஆளும் அணி தலைவராக அடாவடி அன்சர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் அணித் தலைவராக தன்யா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒவ்வொரு நாளின் ஆரம்பத்திலும் பாடல் மூலம் போட்டியாளர்களை நடனமாடவைத்து காலைப் பொழுதைத் தொடங்குவது வழக்கம். ஒவ்வொரு நாளும் அன்றைய சூழலை தொடர்புப்படுத்தும் வகையில் பாடலை பிக் பாஸ் ஒலிபரப்புவார்.
இதனால், இன்று காலை என்ன பாடல் ஒளிபரப்பாகும் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்களிடமும் ரசிகர்களிடமும் ஏற்படும்.
அந்தவகையில் 5வது வாரத்தின் முதல் நாளில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இடம்பெற்ற ’’ஐ லவ் யூ டூ..’’ என்ற பாடலை பிக் பாஸ் ஒலிபரப்பினார். இதனால், பிக் பாஸ் வீட்டில் 2 காதல் நடக்கிறதா? என்ற கேள்வியை முனியம்மா எழுப்பியுள்ளார்.
நடிகர் முகேஷ் நடிகை ஷாதிகாவுடன் நெருங்கிப் பழகி வரும் நிலையில், பிழைக்க வந்த இடத்தில் காதல் வேண்டாம் என்பதைப்போல முகேஷிடம் முனியம்மா முன்பு கூறியிருந்தார்.

முகேஷ் - ஷாதிகா
இதேபோன்று இன்னொரு காதல் ஜோடி யார் என ப்ருத்வியிடம் முனியம்மா கேள்வி கேட்கிறார். நீ காதல் செய்கிறாயா ப்ரித்வி? எனக் கேட்டார். அதற்கு சிரித்து பதில் ஏதும் அளிக்காமல் ப்ருத்வி சென்றுவிட்டார். ஏனெனில், ஷாவுடன் ப்ருத்வி நெருங்கிப் பழகி வருவதால், இக்கேள்வியை அவரிடம் முனியம்மா கேட்டார். இந்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
Summary
Bigg boss 10 tamil Two romantic couples in the Bigg Boss house says muniyammal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


