ஆந்திரம் சென்றார் முதல்வர் விஜய்! உற்சாக வரவேற்பு!தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடை ஊழியர்கள் நாளை வேலைநிறுத்தம்!ஜெயிலர் 2 படத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ. 700 தீபாவளி மளிகை தொகுப்பு! புதுவை அரசுமின் தடை, ஒரு யூனிட் ரூ.35, தனியாரிடம் மின் கொள்முதல்! அமைச்சர் நிர்மல் குமாரிடம் சரமாரிக் கேள்விதிமுக ஆட்சியில் ரூ. 20-க்கு வாங்கப்பட்ட மின்சாரம், ரூ. 35-க்கு கொள்முதல்! செந்தில் பாலாஜிபள்ளிகளில் வாரத்தில் 5 நாள்களும் உடற்கல்வி வகுப்புகள்! ராஜ்மோகன் அறிவிப்பு

பிக் பாஸ் வீட்டில் சிறந்த திருடன் யார்? ரசிகர்கள் எதிர்பார்த்த போட்டி தொடக்கம்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த போட்டி தொடங்கியுள்ளது குறித்து...

வைரத்தை மறைத்துவைக்கும் டிடிஎஃப் வாசன்

Published On :

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கிரேட் டைமண்ட் ஹீஸ்ட் டாஸ்க் மீண்டும் வந்துள்ளது.

இந்த முறை யார் மற்றவர்களை விட புத்திசாலித்தனமாகச் செயல்பட்டு வைரத்தைத் திருடி வெற்றி பெறப் போகிறார்கள்? சிறந்த திருடன் யார்? திருடர்களிலேயே மிகச் சிறந்தவர் யார்? என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இதற்கிடையே, டான்ஸ் மரத்தான் டாஸ்க்கும் போட்டியை மேலும் சுவாரஸ்யமாக்குகிறது. மற்ற போட்டியாளர்கள் நடனத்தில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், முன்னோட்ட விடியோவில் (ப்ரோமோ) காட்டியபடி டி.டி.எஃப். வாசன் அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி வைரத்தைத் திருடி மறைத்து வைக்கிறார்.

வாசனின் இந்தத் திட்டம் அவருக்கு வெற்றியைத் தேடித்தருமா? அல்லது மற்ற போட்டியாளர்கள் அவரது திட்டத்தைக் கண்டுபிடிப்பார்களா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இரண்டு டாஸ்க்குகளும் இணைந்து வீட்டில் பரபரப்பு, புத்திசாலித்தனம் மற்றும் எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்த, இறுதியில் வைரத்தைத் திருடுவதில் யார் மாஸ்டர் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும் என்கிறது பிக் பாஸ் குழு.

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியை தினமும் இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் பார்க்கலாம். ஜியோ ஹாட்ஸ்டாரில் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். இதுமட்டுமின்றி பிக் பாஸ் வீட்டின் 24 மணி நேர நேரலை ஒளிபரப்பையும் ஹாட் ஸ்டாரில் காணலாம்.

Summary

Bigg boss 10 tamil Who is the best thief in the Bigg Boss house The much-awaited contest begins

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.