சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

சீதையின் புனிதத்தை ராமாயணா படத்தில் வெளிப்படுத்திய சாய் பல்லவி: யஷ்

நடிகை சாய் பல்லவியின் நடிப்பு குறித்து நடிகர் யஷ் கூறியிருப்பதாவது...

 Sai Pallavi as sita, Yash at trailer launch

சாய் பல்லவி, யஷ் - படங்கள்: எக்ஸ் / பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ்

Updated On :

நடிகர் யஷ் ராமாயணா திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகை சாய் பல்லவியின் நடிப்பு குறித்து தெய்வீகம், புனிதம் என மிகவும் பாராட்டி பேசியுள்ளார்.

நிதீஷ் திவாரி இயக்கத்தில் ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் ராமாயணா என்ற படத்தை உருவாக்கியுள்ளார். இதில் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சன்னி தியோல் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சோனி பிக்சர்ஸ் இந்தப் படத்தின் முதல் பாகத்தை உலகம் முழுவதும் வரும் நவ.5ஆம் தேதி வெளியிட இருக்கிறது. பல மொழிகளில் சர்வதேச அளவில் இந்தப் படம் வெளியாகவிருக்கிறது.

பிரைம் ஃபோகஸ் ஸ்டூடியோஸ், மான்ஸ்டர் மைன்ட் கிரியேஷன்ஸ் டி.என்.இ.ஜி. தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ராமனாக ரன்பீர், சீதையாக சாய் பல்லவி, ராவணனாக யஷ் நடித்துள்ளார்கள். இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் யஷ் பேசியிருப்பதாவது:

ரன்பீர் கபூர் மிகவும் தன்னடக்கமான கடினமாக உழைக்கும் நடிகர். தன்னை முழுமையாக கதாபாத்திரத்துக்கு ஒப்புக்கொடுக்கும் நடிகர் அவர். அவ்வளவு கவனமாக நடிப்பது கடினம். அந்த அர்ப்பணிப்புக்கு கடவுள் அவருக்கு ஆசிர்வதிப்பார்.

சாய் பல்லவி எப்போதும் பக்தியுடனே இருப்பார். எந்த அளவுக்கு என்றால், படப்பிடிப்பில் ஐந்து நிமிஷம் அவரைப் பார்க்கும் போதும் அவர் சீதையை ஞாபகப்படுத்துவார். அந்தளவுக்கு பக்தியுடன் வாழ்கிறார். ஆனால், மக்களுக்கு இதெல்லாம் தெரியாது.

படப்பிடிப்பில் சாய் பல்லவியைப் பாருக்கும் போது சீதையைப் பார்ப்பது போலவே இருக்கும். கடவுளுக்கு பயந்து இருக்கமாட்டார்; ஆனால், மிகவும் அர்ப்பணிப்புடன் கடவுள் பக்தியுடன் இருப்பார். எங்கு பேசினாலும் கடவுளைப் பற்றியே பேசுவார்.

சீதையாக சாய் பல்லவி நடித்தது எனக்கு மகிழ்ச்சி. சீதையின் புனிதம், அவருக்குள் இருக்கும் பிரகாசத்தை கலையின் மூலமாக சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கடவுள் அவருக்கு நன்மைகள் செய்வார் எனக் கூறியுள்ளார்.

Summary

Yash says Ranbir Kapoor fully surrendered himself to Lord Rama, lauds Sai Pallavi’s devotion

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.