இஞ்சி வெல்லம் படப்பிடிப்பு நிறைவு!
இஞ்சி வெல்லம் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாகத் தகவல்...

நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் மணிரத்னம் தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர்கள் விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். காதல் கதையாக உருவாகும் இதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் கொல்கத்தாவில் தொடங்கியது.
அங்கு ஹவுரா பாலத்தில் நடிகர் விஜய் சேதுபதியும், சாய் பல்லவியும் பாடல் காட்சிக்கு நடித்து வருவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றது. தொடர்ந்து, இப்படத்திற்கு இஞ்சி வெல்லம் எனப் பெயரிட்டுள்ளதாக கிளிம்ஸ் வெளியிட்டு அறிவித்தனர்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு 90 நாள்களில் முழுமையாக நிறைவடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கதையும் கொல்கத்தாவில் நடைபெறுவது போல் எழுதப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனம் இணைந்து தயாரிக்கும் படமென்பதால் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Reports indicate that the filming of the movie starring Vijay Sethupathi and Sai Pallavi has been completed.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


