ஜெயிலர் 2! மோகன்லால் காட்சிகள் எங்கே? மலையாள நடிகர் ஆதங்கம்
ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடித்த காட்சிகள் குறைவாக இருப்பதாக மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்தது குறித்து...
ஜெயிலர் 2-வில் மோகன்லால் - ஜெயிலர் 2 டிரைலர்
ஜெயிலர் 2 படத்தில் மோகன்லால் நடித்த காட்சிகள் குறைவாக இருப்பதாக மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், மோகன்லால், எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு, வித்யா பாலன், ரம்யா கிருஷ்ணன், மிர்ணா மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் அக். 15-ல் ஜெயிலர் 2 வெளியானது. இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார்.
ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்த நிலையில், இரண்டாம் பாகமும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நிலையில், ஜெயிலர் 2-வில் மோகன்லாலுக்கு போதிய காட்சிகள் தரவில்லை என மலையாள நடிகர் ஆர்யன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்யன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஜெயிலர் 2 படம் பார்த்துவிட்டு வெளியே வந்தபோது, ஒரு ரஜினிகாந்த் ரசிகனாக எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. நெல்சன் ரசிகனாகவும் எனக்கு திருப்தியாக இருந்தது. ஆனால், மோகன்லால் ரசிகனாக நான் மிகவும் மனம் வருந்தினேன்.
ஜெயிலர் 1 படத்தில் ரஜினிகாந்துடன் மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோருக்கு திரையில் உரிய காட்சிகளும் பங்களிப்பும் கொடுக்கப்பட்டது எனக்கு பிடித்திருந்தது. தலைவர் ரஜினிகாந்த் படத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே மாஸ் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால், இப்போது (ஜெயிலர் 2) அது இல்லாமல்போனதாக உணர்கிறேன். படத்தில் ரஜினிகாந்த் பக்கம் மட்டுமே காட்சிகள் இருந்ததாகத் தெரிகிறது.
குறைந்தபட்சம், டிரைலரில் இருந்தளவுக்காவது மோகன்லால் காட்சிகளை வைத்திருக்கக் கூடாதா நெல்சன் ப்ரோ?
நிச்சயமாக அனைவரும் பார்க்க வேண்டிய படம் இது. ஆனால், மோகன்லால் ரசிகர்களே! திரைப்படம் பார்க்கச் செல்வதற்கு முன் உங்கள் எதிர்பார்ப்புகளை வெளியே வைத்துவிடுங்கள்.
நான் இன்னும் ரஜினிகாந்த், நெல்சன் ரசிகனாக இருந்தாலும், எப்போதும் மோகன்லால் ரசிகனே" என்று கூறியுள்ளார்.
Summary
Malayalam actor Aaryan upset with Mohanlal's reduced presence in Jailer 2
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


