சூப்பர் ஸ்டார் டைட்டில் கார்டு! இன்றுவரை ரசிகர்களை ஆட்டுவிக்கும் தேவாவின் பிஜிஎம்இசையமைப்பாளர் தேவா காலமானார்!டாஸ்மாக் கடைகளில் விரைவில் 4 புதிய பீர் வகைகள்! விலை விவரம்!வடபழனி மெட்ரோ ரயில் நிலையத்தில் இறங்கினால்... அடுக்கடுக்கான குளறுபடிகள்! மக்கள் கேள்விஇன்று கோவை, திருவள்ளூா் உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கை ராமேசுவரம் - எழும்பூருக்கு இன்று சிறப்பு விரைவு ரயில் தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் நாளை பகுதி ரத்து லாஸ் ஏஞ்சலீஸ் மேயா் தோ்தல்: கேரள வம்சாவளி பெண் முன்னிலை பிரதமா் மோடி டிசம்பரில் கனடா பயணம்

நல்ல வரவேற்பு: ரூ. 200 கோடி வசூலை தாண்டிய ஜெயிலர் 2!

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் குறித்து...

Jailer 2 film poster

ஜெயிலர் 2 படத்தின் போஸ்டர் - படம்: எக்ஸ் / அஹிம்சா என்டர்டெயின்மென்ட்ஸ்

Updated On :

நடிகர் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் இரண்டு நாள்களில் ரூ.210 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்.15ல் உலகம் முழுவதும் வெளியானது. இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது.

நெல்சன் இயக்கிய ஜெயிலர் முதல் பாகம் கடந்த 2023ல் வெளியாகி ரூ.600 கோடி வசூலித்தது. இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, சுராஜ், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

மோகன்லால், ஷிவ ராஜ்குமார் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளார்கள். முதல் பாகம் போலவே இந்தப் படத்துக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்த நிலையில், இரண்டு நாள்களில் உலகம் முழுவதும் ரூ. 210.65 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் நாளில் 125 கோடியும் இரண்டாவது நாளில் 85 கோடியும் வசூலித்துள்ளது.

அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படம் இந்தியாவில் மட்டுமே ரூ.113. 65 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Summary

Rajinikanth-starrer 'Jailer 2' earns Rs 210 crore at box office .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.