தற்பெருமைக்காக கொலை செய்வதா? டைகர் ஷெராஃப் தாக்குதல் பற்றி ஆர்ஜிவி கருத்து!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான தாக்குதல் பற்றி இயக்குநர் ராம் கோபால் வர்மா கூறியிருப்பதாவது...

டைகர் ஷெராஃப், ராம் கோபால் வர்மா - படங்கள்: பிடிஐ, ராம் கோபால் வர்மா எக்ஸ் பக்கம்.
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராஃப் மீதான துப்பாக்கிச் சூடு பற்றி திரைத்துறையில் இருந்து முதல் ஆளாக இயக்குநர் ராம் கோபால் வர்மா பேசியுள்ளார்.
பாலிவுட் டைகர் ஷெராஃப், மும்பை ஜூஹூவில் உள்ள புஷ்பா பூங்காவில் கால்பந்து விளையாடிவிட்டு காரில் திரும்பும்போது இருசக்கர வாகனத்தில் காத்திருந்த 3 பேர் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்தச் சம்பவத்துக்குப் பிறகு உடனடியாக டைகர் ஷராஃப் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு மார்பு மற்றும் வலது தோள் பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது. கைகளிலும் கட்டு போடப்பட்டிருந்த புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி அளித்தது.
சல்மான் கானுடன் இணைந்து நடித்ததற்காக இவர் மீது லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அவர்களே ஒப்புக்கொண்டுள்ளார்கள்.
இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் யாரும் வாய்த்திறக்காத நிலையில், இயக்குநர் ராம் கோபால் வர்மா தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
டைகர் ஷெராஃபுக்கு நடந்த விஷயம் இதுவரை நாம் பார்க்காத ஒன்றாக இருக்கிறது. முன்பெல்லாம் கொள்ளையடிக்கும் போதும் கூலிப்படைகளுக்காகவும் கட்டப்பஞ்சாயத்துக்களுக்காவும் கொலைகள் நடந்து வந்தன. தற்போது, முதல்முறையாக பெருமைக்காவும் தற்பெருமைக்காகவும் அவர்கள் கொலை செய்ய விரும்புகிறார்கள் எனப் பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் ராம் கோபால் வர்மா (ஆர்ஜிவி) இயக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் படமாக ’போலிஸ் கம்பெனி’ உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மீண்டும் இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
Summary
Killing for pride and vanity? RGV condemns attack on Tiger Shroff!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


